புத்தக
அறிமுகம் - ஈழ ஏதிலியர் ஓர் அறைகூவல்
தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்
20 ஜனவரி
2014 அன்று சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில், ஏதிலியர் ஓர்
அறைகூவல் – சிக்கல்கள் தீர்வுகள் செயல்முறைகள் என்ற தலைப்பில், திரு.
அ. குழந்தை அவர்களது ஒருங்கிணைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. பச்சையப்பன்
கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் அவர்கள் தலைமை
வகித்தார். உணர்ச்சிக்கவி திரு. காசியானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக
பங்கேற்றார். அறிஞர்கள் தங்கள் கருத்துக்களை அரங்கில் பகிர்ந்துக்கொண்டனர். கருத்தரங்கினுடைய
நிறைவு விழாவில் , “ஈழ ஏதிலியர் ஓர் அறைகூவல்” என்ற தலைப்பில் கருத்தரங்க கட்டுரைகள் புத்தகமாக
வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை
தலைவர் முனைவர் வி. அரசு அவர்கள் வெளியிட, சென்னைப் பல்கலைக்கழக இதழியல்
துறைத்தலைவர் முனைவர். ரவீந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். புத்தகத்தில் ஈழத்தமிழர் வரலாறு குறித்தும், அவர்களது
உளவியல், பொருளாதார நிலை, மொழி மற்றும் பன்பாடு, அவர்களுக்கான சட்டங்கள் போன்ற
தலைப்புகளில் விரிவாக
எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்
1.ஈழத்தமிழர் வரலாறு
முனைவர் வா.மு.சே ஆண்டவர்,
தமிழ் இணைப் பேராசிரியர்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை – 30.
2.ஏதிலியர் பண்பாடு
த.நா. சந்திரசேகரன்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,
புது டெல்லி.
3.மொழியால் சிதைந்த
ஏதிலியர்
அ. குழந்தை,
சென்னைப் பல்கலைக்கழகம்
4.ஏதிலியரின் உளவியல்
முனைவர். தேவநேசன், முதல்வர்,
தென் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தூத்துக்குடி
5.ஏதிலியரின் பொருளாதாரம்
அ. லூயி ஆல்பர்ட், இயக்குனர்,
இயேசு அவை ஏதிலியர் பணி,
திண்டுக்கல்
6.ஊடகப் பிம்பங்களும்
ஏதிலியரும்
முனைவர். அ. ஸ்டீபன், இயக்குனர்,
வைகறை பதிப்பகம், திண்டுக்கல்
7.ஏதிலியர் உரிமைச்
சட்டத்தின் தேவை
தோழர் தியாகு, பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
8.பன்னாட்டு மற்றும்
தேசிய அளவிலான ஏதிலியரின் சட்டத்தின் தேவை
பேராசிரியர். அ. மார்க்ஸ், மேனாள் பேராசிரியர்,
மாநிலக்கல்லூரி, சென்னை
9.தொண்டில் உண்டு தொடர்
பயணம்
முனைவர். பால் நியூமன், பேராசிரியர்,
தூயவளனார் கல்லூரி, பெங்களூர்
10.ஈழத்திற்கான தமிழக
மாணவர் போராட்டமும் முகநூலும் – ஓர் ஆய்வு
அ. ஆரோக்கிய சகாயராஜா,
சென்னைப் பல்கலைக்கழகம்
11.மலையகம் எனும்
அடையாளம்:-
ஏதிலியர் வாழ்க்கையின்
இன்னொரு பரிமாணம்
முனைவர் வீ. அரசு, தமிழ் இலக்கியத் துறைத்
தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொகுப்பாசிரியர்கள்
திரு. அ. குழந்தை
முனைவர். வா.மு.சே. ஆண்டவர்
நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக