திங்கள், 26 ஆகஸ்ட், 2013

தமிழ்த் தென்றல் திரு.வி.க

தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களுக்கு இன்று பிறந்த நாள். 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கல்யாணசுந்தரம். இவர் பங்காற்றிய துறைகள் பல. எழுத்தாளர், பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தொழிற்சங்கத் தலைவர்,  தேசபக்தர், தேசத்தொண்டர், பேச்சாளர், கவிஞர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுப்பட்டவர் என்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எளிமையாக வாழ்ந்தவர். இவரது மொழி நடை பாமரரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் இருந்தது. தமிழ் மொழி உரைநடை வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய பிறந்த நாளான இன்று மிகவும் சிறப்பிற்குரிய நாளாகும். இன்நன் நாளில் தமிழ் மொழிக்காக நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் என்று சற்றேனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சனி, 3 ஆகஸ்ட், 2013

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்




நாம் கொண்டாடும் ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு வரலாறு உள்ளதை அறிவோம். அதுபோல் நண்பர்கள் தினத்திற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும், அது என்னவாக இருக்கும் என்பதை இனி காண்போம்.
1935ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் ந‌ட்பு தினம் குறித்து ஒரு தீர்மாணத்தை கொண்டுவந்தது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை நண்பர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
குறள் 783:
  நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
  பண்புடை யாளர் தொடர்பு.
 பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
  Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
  So the heart by use grows fonder, Bound in friendship with the good.
  Like learning, the friendship of the noble, the more it is cultivated, the
  more delightful does it become.
குறள் 784:
  நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
  மேற்செனறு இடித்தற் பொருட்டு.
    நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
  Nor for laughter only friendship all the pleasant day,
  But for strokes of sharp reproving, when from right you stray.
  Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
claim for it.
குறள் 786:
  முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
  அகநக நட்பது நட்பு.
  முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
  Not the face's smile of welcome shows the friend sincere,
  But the heart's rejoicing gladness when the friend is near.
  The love that dwells (merely in the smiles of the face is not friendship;
  (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.