வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கம்பன் விழா 2015 ஆகஸ்ட் 14, 15, 16.சென்னைக் கம்பன் கழகத்தால் நடத்தப்படும் 41ஆம் ஆண்டு கம்பன் விழா

2015 ஆகஸ்ட்  14, 15, 16.

நிகழ்ச்சி நிரல்

14.08.2015 வெள்ளிக் கிழமை மாலை 05.00 மணி.

கம்பன் இசை மாலை: திருமதி. காயத்ரி கிரிஷ்
இறைவணக்கம்: திரு. டி.கே.எஸ். கலைவாணன்.
வரவேற்புரை: திரு. இராம. வீரப்பன், தலைவர் கம்பன் கழகம்.
திரு. இ.ரெ. சன்முகவடிவேல் எழுதிய கம்பனின் சுவைநுகர் கனிகள்.
ஏ.வி.எம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் வெளியீடு :
திரு. அவ்வை நடராஜன்.
கம்பன் கழகமும் ஸ்ரீ கிருஷணா ஸ்வீட்ஸும் இணைந்து நடத்திய “மூலக்கதையில் முளைத்த கதைகள்” – “சிற்றிலக்கியச் சுற்றுலா” ஒலிப்பேழைகள் வெளியீடு :
திரு. எஸ். ஜெகத்ரட்சகன்.
விருதாளர் அறிமுக உரை: திருமதி. சாரதா நம்பி ஆரூரன்.
தலைமை உரை: நீதியரசர். பு. இரா. கோகுலக்கிருஷணன்.
சிறப்புரை: நீதியரசர். வெ. இராமசுப்பிரமணியன்.
“கம்பனில் ஏழாம் எண்”

15.08.2015 சனிக்கிழமை

காலை 09.00 மணி.
ஆய்வரங்கம்:
கம்பன் அருட்கவி ஐந்து: சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை மாணவியர்.
இறைவனக்கம்: திருமதி. பிரமிளா குருமூர்த்தி
காலை 09.00 மணி.
தனியுரை: செல்வி. க. அக்ஷயா “கம்பனில் பெற்றது”
காலை 10.00 மணி.
தகவுரை: திருமதி. சாரதா நம்பி ஆரூரன். “கம்பனும் பண்களும்”
காலை 11.00 மணி.
தெளிவுறு அரங்கம்:
தலைமை: திரு. தெ. ஞானசுந்தரம்.
தலைப்பு:
“வீழினும் வெளிப்படும் மேன்மைசால் பண்புகள்”.
தயரதனில்: திரு. அரங்க இராமலிங்கம்.
சடாயுவில்: திரு. திருப்பூர் கிருஷணன்.
வாலியில்: திரு. மா. இராமலிங்கம்.
மண்டோதரியில்: திருமதி. டி.எஸ். பிரேமா.
பிற்பகல்  03.00 மணி.
மாணவர் விவாத அரங்கம்:
நெறியாளர்: திருமதி. சுமதி.
தலைப்பு: “கம்பனில் மனத்தைப் பெரிதும் நெகிழ வைப்பது”
தயரதனின் மரணம்: திரு. கோ. மணி.
பரதனின் பண்பு: செல்வி. வ. தமிழரசி.
குகனின் அன்பு: செல்வன். மு. ராஜ்குமார்.
அங்கதனின் அறம்: செல்வி. ப. யாழினி.
அனுமனின் தொண்டு: செல்வன். கோ. சரவணன்.
கோசலையின் இழப்பு: செல்வி. ப. கங்காதேவி.
மாலை 05.00 மணி.
இறைவணக்கம்: திருமதி. ஞா. கற்பகம்.
இன்னுரை: திரு. மு. இராமச்சந்திரன்.
“தேரோட்டும் மந்திரி”
மாலை 06.00 மணி.
கலைத்தெரி அரங்கம்:
தலைமை: திரு. இலங்கை ஜெயராஜ்.
தலைப்பு: “கம்பனின் கவிநுட்பம் பெரிதும் சுடர்விடுவது”
மகிழ்ச்சியில்: திருமதி. விஜயலட்சுமி இராமசாமி.
சூழ்ச்சியில்: திரு. பெ. இலக்குமிநாராயணன்.
அவலத்தில்: திரு. த. இராசாராம்.
வீரத்தில்: திரு. கி. சிவக்குமார்.

16.08.2015 ஞாயிற்றுக்கிழமை

காலை 09.00 மணி.
பாங்கறி அரங்கம்:
இறைவணக்கம்: செல்வி. கே.டி. புவனபாரதி.
இயலுரை: திரு. கோ. சாரங்கபாணி.
தலைப்பு: “துஞ்சலில் நயனத்தன்”
காலை  10.00 மணி.
கவியரங்கம்:
தலைமை: கவிஞர். தி.மு. அப்துல்காதர்.
தலைப்பு: “கேளாமல் போன கேள்விகள்”.
பரதன் தயரதனிடம்: கவிஞர். ரமணன்.
ஊர்மிளை இலக்குவனிடம்: கவிஞர். நெல்லை ஜெயந்தா.
தாரை ராமனிடம்: கவிஞர் மணிவண்ணன்.
மண்டோதரி இராவணனிடம்: கவிஞர். மலர்மகன்.
காலை 11.30 மணி.
தமிழ்ச்சோலை:
தலைமை:  திரு. சிலம்பொலி செல்லப்பன்.
தலைப்பு: “குறைந்த பங்கும் நிறைந்த பாங்கும்”
சத்துருக்கனன்: திரு. புதுவை நா. இளங்கோ.
விசுவாமித்திரன்: திரு. தட்சிணாமூர்த்தி.
திரிசடை: திருமதி. மகேஷ்வரி சற்குரு.
இந்திர சித்தன்: திரு. மரபின் மைந்தன் முத்தையா.
மாலை 04.00 மணி.
எழிலுரை:
திருமதி. பாரதிபாஸ்கர்:
தலைப்பு: “யாவரே ஆற்றவல்லார்?”
மாலை 05.00 மணி.
பட்டிமண்டபம்
இறைவணக்கம்: திருமதி. வித்யாகல்யாணராமன்.
நடுவர்: திரு. இலங்கை ஜெயராஜ்.
தலைப்பு: போர்களத்தில் தம் இணையற்ற செயல்களால் பெரிதும் கவருவோர்
அயோத்தி வீரரே!:
திருமதி. இராம சௌந்தரவல்லி.
திருமதி. மணிமேகலை சித்தார்த்.
திரு. இரா. மாது.
கிட்கிந்தை வீரரே!:
திருமதி. விஜயசுந்தரி.
திருமதி. கவிதா ஜெவகர்.
திரு. எஸ். மோகனசுந்தரம்.
இலங்கை வீரரே!:
திருமதி. பர்வீன்சுல்தானா.
திருமதி. சுமதிஸ்ரீ.
திரு. அ.க. இராசாராமன்.
நோக்கர்கள் சார்பில் வாதிடுபவர்: திரு.எஸ். விஜயகிருஷணன்.
நன்றியுரை: திரு. இலக்கியவீதி இனியவன், செயலர், கம்பன் கழகம்.

நடைபெறும் இடம்:

AVM  ராஜேஸ்வரி திருமண மண்டபம்,
டாக்டர் ராதாகிருஷணன் சாலை,
மயிலாப்பூர், சென்னை.

திங்கள், 29 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான கணினிப் போட்டிகோல்டன் விஷன் அரிமா சங்கத்தின் ஹெலன் கெல்லர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

அன்புடையீர்,
பார்வையற்றோரைக் கொண்டு உலகிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட கோல்டன் விஷன் அரிமா சங்கம் தனது ஓராண்டை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் அடுத்த ஆண்டின் தொடக்க விழா மற்றும் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் விழா வரும் 05.07.2015 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. இதில் ஹெலன் கெல்லர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் பொருட்டு பார்வையற்றோருக்கான கணினி போட்டி 05.07.2015 ஞாயிற்றுக் கிழமை நன்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திரைவாசிப்பு பயனாளர் மட்டுமே பங்கேற்க இயலும் என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 03.07.2015 மாலைக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம். இப்போட்டி  மைக்ரோசாஃப்ட் வேட் ஒரு பகுதியாகவும், இணையம் மற்றொரு பகுதியாகவும் நடைபெறும். தாங்கள் கலந்துக்கொள்ள விருப்பமான பகுதியைத் தெரிவிக்க வேண்டும்.

பங்கேற்பாளர்கள் மடிக்கணினி, ஹெட் செட், டேடா கார்ட் போன்றவற்றைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
பங்கேற்பாளர்கள் கணினியின் திரையைப் பார்த்து பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலும் வெற்றிப் பெறும் முதல் மூவருக்கு  அன்று மாலை நடைப்பெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.

தொடர்புக்கொள்ள வேண்டிய செல்பேசி எண்:

சே. பாண்டியராஜ் 9 8 4 1 1 2 9 1 6 3.

நடைபெறும் நாள்:

05.07.2015 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: 01.30 மணி

இடம்:

ராஜன் ஐ கேர் மருத்துவமணை,
வள்ளுவர் கோட்டம்,
சென்னை.
குறிப்பு: மதிய உணவிற்கு பிறகு தொடங்குவதால் உணவு ஏற்பாடு செய்யவில்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.....

புதன், 28 ஜனவரி, 2015

பார்வையற்றோர் பயன்பாட்டில் ஆன்டிராய்டு!பார்வையற்றோர் பயன்பாட்டில் ஆன்டிராய்டு!

கலந்துரையாடல்


அன்புடையீர்,
ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அமைப்புகள் சார்பாக ஒவ்வொரு மாதமும் கணினி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்று வருவதை அனைவரும் அறிவோம். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு ஆன்டிராய்டு பயன்பாடு என்ற பொருண்மையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில், ஆன்டிராய்டு அடிப்படை, பார்வையற்றோருக்கான சிறப்பு மென்பொருள்கள், அதன் பயன்பாடு மற்றும்  பயன்படுத்தும் முறை, கூடுதல் பயன்பாட்டிற்கான செயலிகள் மற்றும் கூட்டுருப்புகள் உள்ளிட்ட தகவல்கள் எடுத்துரைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக,
அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றும்
திருமிகு. A. முருகன் என்கிற முருகராஜன் ஐயா அவர்களும்,
நியு இன்டியா அஷுரன்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் மேற்பார்வையாளராக பணிப்புரியும்
திருமிகு. B. கண்ணன் ஐயா அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 05.02.2015 வியாழக்கிழமைக்குள் தங்களது வரவை pandiyaraj18@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதி செய்துக்கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், முதலில் பதிவு செய்யும் 50 பார்வையற்றோர் மட்டுமே பங்கேற்க இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாள்: 08.02.2015 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: 09:30 முதல் 12:30 வரை

இடம்: கோலப்பெருமாள் செட்டி மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை. டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி அருகில்.

இரங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்: டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி அல்லது என்.எஸ்.கே நகர்.
நன்றி.....