திங்கள், 29 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான கணினிப் போட்டி



கோல்டன் விஷன் அரிமா சங்கத்தின் ஹெலன் கெல்லர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

அன்புடையீர்,
பார்வையற்றோரைக் கொண்டு உலகிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட கோல்டன் விஷன் அரிமா சங்கம் தனது ஓராண்டை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் அடுத்த ஆண்டின் தொடக்க விழா மற்றும் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் விழா வரும் 05.07.2015 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. இதில் ஹெலன் கெல்லர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் பொருட்டு பார்வையற்றோருக்கான கணினி போட்டி 05.07.2015 ஞாயிற்றுக் கிழமை நன்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திரைவாசிப்பு பயனாளர் மட்டுமே பங்கேற்க இயலும் என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 03.07.2015 மாலைக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம். இப்போட்டி  மைக்ரோசாஃப்ட் வேட் ஒரு பகுதியாகவும், இணையம் மற்றொரு பகுதியாகவும் நடைபெறும். தாங்கள் கலந்துக்கொள்ள விருப்பமான பகுதியைத் தெரிவிக்க வேண்டும்.

பங்கேற்பாளர்கள் மடிக்கணினி, ஹெட் செட், டேடா கார்ட் போன்றவற்றைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
பங்கேற்பாளர்கள் கணினியின் திரையைப் பார்த்து பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலும் வெற்றிப் பெறும் முதல் மூவருக்கு  அன்று மாலை நடைப்பெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.

தொடர்புக்கொள்ள வேண்டிய செல்பேசி எண்:

சே. பாண்டியராஜ் 9 8 4 1 1 2 9 1 6 3.

நடைபெறும் நாள்:

05.07.2015 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: 01.30 மணி

இடம்:

ராஜன் ஐ கேர் மருத்துவமணை,
வள்ளுவர் கோட்டம்,
சென்னை.
குறிப்பு: மதிய உணவிற்கு பிறகு தொடங்குவதால் உணவு ஏற்பாடு செய்யவில்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக