செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

பார்வையற்ற பெண் படைப்பாளர்களும் படைப்புகளும்

பார்வையற்ற பெண் படைப்பாளர்களும் படைப்புகளும்

 

முனைவர் பா. தாயாரம்மாள், பேராசிரியர் (ஓய்வு), வாலாஜா.

1.           உதயகண்ணி

கவிதைத் தொகுப்பு,

தமிழ்ச்சாரல் வெளியீடு,

ஆண்டு 2006.

படைப்பாளர் தொடர்பு விவரம் : 9943172104.

 

முனைவர் K. ராதாபாய், பேராசிரியர் (ஓய்வு), புதுக்கோட்டை.

1.           An introduction to Visual Impairment

Dr. k.Radhabai and Dr. N.Jaya,

Category: Prose,

Avinasilingam Deemed University, Coimbatore,

Saratha Printing Press,

Year  1993.

2. Everlasting Efforts: A Review of Services to the Blind 

Dr. K. radhabai.

3. பார்வையற்றோரின் வாழ்வில் நிலையான வளர்ச்சிக்கான அழியா அஸ்திவாரங்கள்

முனைவர் K. ராதாபாய் தமிழில் முனைவர் வரதராஜ்.

படைப்பாளர் தொடர்பு விவரம் : 9003462218.

 

முனைவர் சி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னை.

1.           குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் படைப்பியல் தனித்தன்மைகள்

ஆய்வு நூல்,

வெளியீடு : தமிழ் வளர்ச்சி துறை, சென்னை,

ஆண்டு 2019.

2. பொதிகையில் மலர்ந்த மலர்கள்

கட்டுரைத் தொகுப்பு

வெளியீடு : தமிழ் வளர்ச்சி துறை, சென்னை,

ஆண்டு 2021

3. விவசாயத்தில் அறிவியல் அன்றும் இன்றும்

கட்டுரைத் தொகுப்பு

வெளியீடு: வத்சலா பதிப்பகம்

ஆண்டு 2026

படைப்பாளர் தொடர்பு விவரம் : 9551628327.

 

முனைவர் கார்குழலி P., பேராசிரியர், சென்னை.

1.           எண்ணச்சாரல்

கவிதைத் தொகுப்பு,

நர்மதா பதிப்பகம், சென்னை,

ஆண்டு 2019.

2.           Subalternity and Literature

Editors: Dr. P. Karkuzhali and Dr. P. Prayer Elmo Raj,

Publisher: Authors Press, New Delhi,

Year of publication: 2017.

3.           Unearthing the Unexplored: A Critical Companion to Fourth World Literature

Editors: Dr. P. Karkuzhali and B. Poovilangothai,

Publisher: Authors Press, New Delhi,

Year of Publication: 2016.

படைப்பாளர் தொடர்பு விவரம் : kuzhali27@gmail.com

 

சு. ரம்யா. (சு. சுப்லா), ஆசிரியர், காரைக்கால், புதுச்சேரி.

1.           புத்தக வெளியில்

கட்டுரை தொகுப்பு,

புது புனல் பதிப்பகம்.

2.           தேள் கொட்டிய திருடன்

குரும் புதினம்,

கிண்டில் வெளியீடு,

ஆண்டு 2019.

3.           சிந்திய துளி

ஹைக்கு கவிதை,

கிண்டில் வெளியீடு,

ஆண்டு 2019.

4.           எடுபடா குரல்

நாடகம்,

கிண்டில் வெளியீடு,

ஆண்டு 2019.

5. சரித்திர விலாசம் 

சகுந்தலா பதிப்பகம்

ஆண்டு ஜனவரி 2025

6. பூங்கொடி காதலி

சகுந்தலா பதிப்பகம்

ஆண்டு டிசம்பர் 2025

படைப்பாளர் தொடர்பு விவரம் : Ramyatrp.111@gmail.com.

 

திருமதி. சோபியா மாலதி, தலைமை ஆசிரியர், தஞ்சாவூர்.

1.           பீனிக்ஸ் பறவைகள்

கட்டுரைத் தொகுப்பு,

கிண்டில் வெளியீடு,

ஆண்டு 2019.

படைப்பாளர் தொடர்பு விவரம் : sophiamalathi77@gmail.com

 

முனைவர் வே. சாந்தி, முதுநிலை விரிவுரையாளர், சென்னை.

1.           தமிழ் பயிற்றுவித்தலும் அகராதி பயன்பாடும்

ஆய்வு நூல்,

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியீடு,

ஆண்டு 2020.

படைப்பாளர் தொடர்பு விவரம் : Shanthiv2810@gmail.com

 

தாஹிரா ஆங்கில ஆசிரியர் வேலூர்.

1. நிசப்த அலைகள் (கவிதைத் தொகுப்பு)

குரு பதிப்பகம்

ஆண்டு 2024

2. அகக்கண் பிள்ளைத் தமிழ்

பண்முக மேடை

ஆண்டு 2026

படைப்பாளர் தொடர்பு விவரம்  thahirab2323@gmail.com

 

நா. ஆனந்தி தமிழாசிரியர் வடலூர்

1. புன்னகை அரும்புகள்

யோகி பதிப்பகம்

ஆண்டு 2025

2. என் விழிக்கொரு தீபம் 

யோகி பதிப்பகம்

ஆண்டு 2024

படைப்பாளர் தொடர்பு விவரம்   amaleshanandhi@gmail.com

 

சாரதா வேணுகோபால்.

1. சாஸ்தா பிறப்பு

 

பா.சுமதி.

1. குடைக்குள் கொடை

 

காயத்திரி.

1. My First Impressions 

வெள்ளி, 26 ஜூன், 2026

செல்லக் குழந்தைகளின் செண்டிமெண்ட் முதல் கவர்ந்தீர்க்கும் கம்ப்யூட்டர் வரை!

 

நெய்தலில் தொடங்கி முல்லையில் நிறைவடையும் “தளிர்களின் பயணம்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு, கடலைப் போல ஆழமாகவும் வனத்தைப் போலப் பரந்து விரிந்த குழந்தைகளின் மனத்தையும் அவர்களது அழகிய வாழ்வியலையும் அழகுபட எடுத்துரைக்கிறது. குடும்பத்தைக் காக்கத் தன் உயிரைப் பொருட்படுத்தாது நாள்தோறும் கடலுக்குள் செல்லும் தன் தந்தையின் நிலையை மாற்றத் துடிக்கும் மகளின் பாசம், தாயை இழந்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் மகனின் மனநிலை, ஆணாகப் பிறந்து தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த குழந்தையின் மனப்போராட்டம், குடிகாரத் தகப்பனை எதிர்கொள்ளும் தளிரின் நிலை, தன் பார்வையற்ற பெற்றோர் தடுமாறிய தருணத்தில் தவித்த பிள்ளை, தூய்மைப் பணியாளரின் மகனாகப் பிறந்து சமூக நீதிக்காகப் போராடத் துடிக்கும் குமரன், கரடியிடம் தன் உயிரைக் காத்துக் கலெக்டரிடம் தன் ஊரைக் காத்துப் பரம்பு நாட்டின் பாரிக்கு நிகராகப் போற்றப்பட்ட பெண் என கதைகளில் வரும் ஒவ்வொரு குழந்தையும் மனதில் நிறைந்து நம்மை நெகிழச் செய்கின்றனர். இயல்பான எளிய நடையில் செல்லக் குழந்தைகளின் செண்டிமெண்ட் முதல் அவர்களைக் கவர்ந்திருக்கும் கம்ப்யூட்டர் வரை உள்ள அத்தனையையும் அழகுபடத் தொகுத்து, அன்பு, பாசம், நேசம், பரிவு, இரக்கம், அறம், வீரம் என அனைத்தையும் கதைகளின் கருப்பொருளில் விதைத்து நம்மை வியக்க வைக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

நூலின் அட்டைப்படம்

கடல் காத்த தளிர் என்ற முதல் கதை தொடங்கி வனத்தளிரின் பெருமூச்சு என்ற இறுதி கதை வரை உள்ள ஒவ்வொரு கதையின் பொருத்தமான தலைப்பும் படிப்போரை ஈர்க்கிறது. சிறுவர் இலக்கியமாக வெளியிடப்பட்டுள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வாழ்வியல் பாடங்களைப் பெரியோருக்கும் கற்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

தனது முதல் படைப்பை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் அச்சுப் பதிப்போடு பிரெய்ல் மற்றும் மின்புத்தகமாக வெளியிட்டு ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலின் ஆசிரியர் தம்பி கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எழுத்தாளர் கார்த்திக் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9884207199

நூலினை அமேசான் கிண்டிலில் வாங்கி படிக்க

தளிர்களின் பயணம்

அச்சு மற்றும் பிரெயில் வடிவிலான புத்தகங்களைப் பெற எழுத்தாளரைத் தொடர்புக்கொள்ளவும்.

நன்றி.

ஞாயிறு, 14 ஜூன், 2026

வேட்டைக்கருப்பின் சாட்டைச்சுழலுமா?

பராசக்தி படத்திற்கு பிறகு தற்போதுதான் ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அறநெறிகளைக் கற்காலம் முதல் கற்பித்து வரும் தமிழ்ச் சமூகத்தில், நீதிநெறி கதைகளுக்கு பஞ்சமில்லை. தப்பு செஞ்சா சாமி கண்ண குத்திடும் என்ற சிறுவர்களுக்கான வாக்கியம் முதல், தெய்வம் நின்று கொல்லும் என்ற பெரியோர்களுக்கான சொற்றொடர் வரை காலகாலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இப்படி சொல்லப்பட்டு வரும் தொடர்கள் மனிதருக்குள் நெறி பிறழாமல் வாழ்வதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குறியே.


கருப்பு திரைப்படம் விளம்பரப்படம்


தற்போது திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகி அதிலும் குறிப்பாக அமேசான் பிரைமில் பார்வையற்றோருக்கான ஒலி விளக்கத்துடன் (audio description) வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாக உள்ள இன்றைய நீதிமன்றத்தின் நிலையைத் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குநர். குற்றத்தை உரிய ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் நிரூபிக்க முயற்சித்தும் அவை அனைத்தையும் பண பலத்தாலும் அதிகாரத்தாலும் தவிடுபொடியாக்கி முறியடிக்கின்றனர். அனைத்து வாய்ப்பையும் இழந்து நிற்கதியான நிலையில் நீதிகேட்டு வேட்டைக் கருப்பிடம் வேண்ட, கருப்பசாமி தெய்வமாகவும், மனிதனாகவும் மாறிமாறி நீதிக்காக போராடுவதாக கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அந்த காலத்து மாயாஜால கதைகளைப்போல அமைக்கப்பட்ட காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் இப்படிப்பட்ட மாயாஜால சாகச காட்சிகள் இன்றைய குழந்தைகளாலும் இளைஞர்களாலும் பெரிதும் விரும்பப்படுகிறது என்பதை நம்மால் மறுக்க இயலாது.

என் தலையில இவனுங்க மிளகாய் அரைச்சது பத்தாதா நான் வேற அவன் தலையில மிளகாய் அரைக்கணுமா அவனே இங்க நீதிக்கேட்டு வந்தவந்தான் போல என்ற வசனம் சிரிப்பினூடே நம்மைச் சிந்திக்க வைக்கிறது. கருப்பசாமியான சூர்யா வழக்கறிஞரான RJ பாலாஜியிடம் எல்லாத்துக்கும் தெய்வம் வரணும்னா மனுஷங்க நீங்க எதுக்குடா?, நேர்மைங்கிறதும் ஒரு அடிக்ஷன் தான் அதற்கு மனிதன் பழகிட்டா மாத்தவே முடியாது போன்ற வசனங்கள் இடம்பெறும் காட்சிகள் காண்போரை ரசிக்க வைக்கிறது.

இன்றைய நீதிமன்றத்தில் நீதிபெற வேண்டுமானால், மனிதனைவிட பெரும் சக்தி தேவைப்படுகிறது என்ற அவலநிலையின் கசப்பான உண்மையை உணர்த்த கருப்பின் சாட்டையை சுழற்றியுள்ளார் இயக்குநர்.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது பார்வையற்றோருக்கான அமைப்புகளும், தனிநபர்களும் பணி வாய்ப்பு இட ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையாக விசாரணைக்கு வராதது, தொடர் முயற்சியின் விளைவாக விசாரணைக்கு வந்தபோதும் பார்வையற்றோர் சார்பான வழக்கறிஞர்களே வழக்கில் ஆஜராகாமல் தட்டிக்கழித்து வந்ததால், நீதிமன்றம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத காரணத்தைச் சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்ததை அறிந்த அந்த வேதனையான தருணம் என் நினைவில் வந்து மனம் கொதித்து கலங்கி பார்வையற்றோருக்கான நீதியைப் பெற இப்படி ஒரு கருப்பு வருமா என்று ஏங்குகிறது.

நன்றி. 

வெள்ளி, 16 ஜனவரி, 2026

பனித்துளி அளவேனும் ரௌத்திரம் பழகுங்களேன்!

சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பன்முக மேடை பதிப்பகத்தில் கவிஞர் முனைவர் உ. மகேந்திரன் அவர்கள், தனது "அனல் வீசும் பனித்துளிகள்" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். "ரௌத்திரம் பழகு" என்ற முண்டாசுக் கவிஞனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, தன் வரிகளால் வரையறைகளை மீறுபவர்களின் முகத்திரையைக் கிழித்தெறியும் இவரின் சமூக அக்கறையை வார்த்தைகளால் வரையறுத்திட இயலாது.

இவருடைய கவிதைத் தொகுப்பின் தொடக்கத்தில், பிஞ்சு மழலையின் கொஞ்சு மொழியை, செல்லமதன் சேட்டையை, அதன் தொடுதலில் உணர்த்திய நேசத்தை, தன்னைப் பண்படுத்திய பாசத்தை என மழலையின் மகத்துவத்தைக் கூறி நம்மை மகிழச் செய்கிறார். அடுத்த நிலையில் நட்பின் இலக்கணத்தை, அவர்கள் ஊட்டியில் அடித்த லூட்டியை எனப் பார்வையற்ற நண்பர்களுடனான மலைவாழ் அனுபவங்களைக் கூறி நம்மை மலைக்கச் செய்கிறார்.

இப்படித் தொடக்கத்தில் அன்பு, பாசம், நேசம் என நம் மனதை இதமாக்கி, தன் வரிகளுக்குள் நம்மை ஈர்த்துப் பயணிக்கச் செய்த கவிஞர், மெல்ல மெல்ல நமக்குள் சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கும் கொடூரங்களான ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், அடக்கப்படுதல், ஆதிக்கம் செலுத்துதல், உதாசீனப்படுத்துதல், உரிமை மறுத்தல், புறக்கணித்தல், துரோகம் இழைத்தல் என்கிற அநீதிகளை எதிர்த்து, தவறைத் தட்டிக்கேட்கும் பொருட்டு "ரௌத்திரம் பழக" வேண்டியதன் அவசியத்தை நம் உள்ளத்தில் உறையும்படி உணர்த்தியுள்ளார்.


நூலின் அட்டைப் படம்

 

ஆசிரியர்களாம் எங்களை தெரியுமா என்ற கவிதையில்

மாணவர்களின் மனதில் பல ஆசையை புகுத்தி,

படிக்கும் எண்ணத்தை வெளியே துரத்தி,

சொல்லித் தருபவரை எதையும் சொல்லக்கூடாது என்று திருத்திய கொடுமைக்குத் தள்ளியது,

உங்களுக்கு ஒரு துளியேனும் வந்து சேர்ந்ததா?

அதிகாரிகள் என்கிற பெயரில், ஆளுக்கு ஒரு ஆணையிட,

அதை எங்கும் முறையிட முடியா நிலையில், தலை எங்கும் நறையிட்டு போய்,

உள்ளம் பாழ்பட்டு  போய் கிடக்கும் பிரஜைகளின் வேதனை உங்களின்  மனதினை அடைந்ததா?

வகுப்பெடுக்க முடியாமல், கணிப்பொறியில்  மாணவரின் குறிப்பை தலைக்கு நூறு  என பதிவேற்றி,

தொழில் திருப்தி இன்றி துயரத்தில் தவிக்கும் எங்களின் இடத்திலிருந்து எதையாவது உணர்ந்து கொள்ள முடிகிறதா?

திரை நடிகனிடம் தன் மூளையை அடகு வைத்த மாணவனை மீட்டிட, கண்டிப்பு காட்டிட முடியாமல், அதிகார வர்க்கத்தால் நிந்திப்பு பெறும் நிலையில் இருக்கும் எங்களை சிந்திக்க உங்களால் எப்பொழுதாவது மட்டுமே முடிகிறதா?

என ஆசிரியர்களை ஏளனம் செய்வோரிடம் தன் அறச் சீற்ற வினாக்களைத் தொடுத்து சிந்திக்க வைக்கும் பாங்கு பாராட்டிற்குறியது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நாநிலம் காணாத இட ஒதுக்கீட்டைக் கொடுத்து அவர்கள் உரிமைகளைக் காத்திடுவோம் என முழங்கியவர்கள்அரசியலில் இட ஒதுக்கீடு தருகிறோம் எனச் சொல்லி விளம்பரம் செய்து, அரசு பணி இட ஒதுக்கீட்டைப் பரித்திட்ட துரோகத்தை தன் அறச் சீற்றத்தால் பின்வறுமாரு  அடையாளப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

உடல் குறை கொண்ட ஏனையோரை,

வேலை ஏற்றம் காண வதை பட்ட  தன் மானத்தோரை,

எங்கெங்கும் மறுக்கப்பட்ட வேலையை மறியல் செய்து பெற்றுத் தந்த இருள் தேசத்தோரை,

படுமோசமாய் நசிக்கிடும் அரசு ஆணைக்கு,

வைத்த பெயரோ  ஒதுக்கீடு,

புரியவில்லை ஐயா இது எந்த மடையன் செய்த கணக்கீடு!

தள்ளாடிடும் தற்காலிக பணியும்,

விழியற்றவனுக்கு இன்று தள்ளாட்டம் காணுது,

துறைகள் எல்லாம் கணக்கிடுகிறோம்,

சிறப்பு தேர்வு நடத்தி ஆள் சேர்க்கும் ஆணை அதை விரைவில் விடுகிறோம்,

என்று அதிகார வர்க்கத்தின் அநியாயக்கார ஐ ஏ எஸ்  துரைகளும்

அவர்களை வைத்து சுட்ட அமைச்சரின் வடைகளும்,

இருள் நட்டு வெளிச்சம் பறித்தவனை வீதியில் வீசிய சதியை அன்றோ செய்தது!

என தொடரும் இருபத்துநான்கு என்னும் மத ஆணை என்ற கவிதையின் சில வரிகளே போதும் அரசு பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செய்திட்ட பச்சை துரோகத்தை உணர்த்திட!

ஆண் எனப்படுவது யாதெனின்?

 அவனுக்கு அது ஊட்டச்சத்து போல் ஊட்டப்பட்டு கொண்டே இருக்கிறது!

அது ஊட்டப்படும் விதத்தில் அவனுக்கு ஆண் எனப்படும் பதக்கம் சூட்டப்படுகிறது!

பதக்கம் சூட்டியவன் எதற்கும் துணிந்தவனாய் இருக்க,

மாண்புகளை மிதிக்கும் மகத்துவத்தை மானசீகமாய் அவன் துதிக்க,

வதைப்பதே வீரமென புத்தியில் நுழைப்பதை அவன் நுகர்ந்து கர்ஜிக்க,

அந்த அவமானத்தின் அரங்கேற்றம் அருவெறுக்க அன்றாடம் நடக்குது,

தாய் கொடிகளின் கருவறுப்பு ஐயோ தடுக்கப்படாமல் தொடருது!

எனத் தொடரும் கவிதையில் ஆணாதிக்கச் சிந்தனையைத் தோலுரித்துக் காட்டி, நாளுக்கு நாள் பிஞ்சுக் குழந்தைகள் முதல் முதிர்ந்த பெண்கள் வரை என எவரையும் விட்டுவைக்காத கொடூர புத்தி கொண்ட, காமவெறி கொண்ட மிருகங்களை விவரிக்கும் கவிஞரின் காத்திரமான வரிகளைப் படித்த எவரும், சாட்டையைக் கையில் எடுக்காமல் இருக்க முடியாது.

எளிய நடையில் அனைவரையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதையும் பல்வேறு வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைத்து, காலந்தோறும் சமுதாயத்தில் பல்வேறு படிநிலைகளில் ஏற்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதை நம்மால் அறிய முடிகிறது. கவிதைகளைப் படிக்கும்போது பனித்துளி போன்ற இவரின் வரிகள் நம் உள்ளத்தில் அனலாக வீசுவதை நம்மால் மறுக்க இயலாது.

கவிதைகளில் பயணித்தவர்கள் பனித்துளி அளவேனும் "ரௌத்திரம் பழகுவது" உறுதி!

 அனல் வீசும் பனித்துளிகள் கவிதைத் தொகுப்பு தற்போது புத்தக திருவிழாவில் KVTC அரங்கு எண் 659, மதி நிலையம் அரங்கு எண் F14, உயிர் பதிப்பகம் அரங்கு எண் 107 போன்ற அரங்குகளில் விற்பனைக்கு உள்ளது.

பேராசிரியர் முனைவர் உ. மகேந்திரன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9944505154

கவிஞரின் படைப்புகளை உடனுக்குடன் படித்திட

https://brighterfighter.blogspot.com/

நன்றி

சேதுபாண்டி 

திங்கள், 12 ஜனவரி, 2026

சென்னை புத்தக திருவிழா அரங்குகளும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகளும்

முழுமையாக படியுங்கள் தங்களின் பேராதரவை வழங்குங்கள்!

KVTC அரங்கு எண் 659.

பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு அரங்கு.

 

மதி நிலையம் அரங்கு எண் F14, உயிர் பதிப்பகம் அரங்கு எண் 107.

Everlasting Efforts: A Review of Services to the Blind 

Dr. K. radhabai.

கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்

ஜி.வைத்தியநாதன் & வி.ராஜகோபால் தமிழில் முனைவர் வரதராஜ்.

பார்வையற்றோரின் வாழ்வில் நிலையான வளர்ச்சிக்கான அழியா அஸ்திவாரங்கள்

முனைவர் K. ராதாபாய் தமிழில் முனைவர் வரதராஜ்.

அனல் வீசும் பனித் துளிகள்

முனைவர் உ. மகேந்திரன்.

 

தமிழ் மண் பதிப்பகம் அரங்கு எண் 514, 515

தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் 

கோவை இளஞ்சூரியன் என்கிற திருக்குறள் பொன்னுசாமி

 

போதி வனம் பதிப்பகம் அரங்கு எண் 263, 264.

குரல்களின் ஊடாக இலக்கிய உலகையும் மனிதர்களையும் வாசிப்பவனின் சில உரையாடல்களும் மதிப்பீடுகளும்  

முனைவர் ஞானகுரு.

 

பாரதி புத்தகாலயம் அரங்கு எண் F43

கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்

முனைவர் மு. முருகேசன்.

 

ஜீவா பதிப்பகம் அரங்கு எண் 172

பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும்

இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள்

பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

தமிழ் வனம் பகுதி 1

தமிழ் வனம் பகுதி 2

அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கு எண் 659-ல் உள்ள புத்தகங்களின் பட்டியல்

1. அந்தரத்தில் தொங்கும் நிலவு - சே.சரவணன்.

2. எங்கே எனது ஒளி - சே. சரவணன்.

3. வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் - மு. ரமேஷ்.

4. தன்னடையாளங்களை எழுதி பார்த்தல் - மு. ரமேஷ்.

5. புத்தம் + திராவிடம் = சமூக நீதி - மு. ரமேஷ்.

6. தமிழ் சங்க மரபில் புத்த சங்க மரபு - மு. ரமேஷ்.

7. சங்க இலக்கியத்தில் நிலங்கள் குடிகள் வழிபாடுகள் - மு. ரமேஷ்.

8. சரித்திர விலாசம் - சுப்லாநாகராஜ்.

9. My First Impressions - காயத்திரி.

10. பூங்கொடி காதலி - சுப்லா நாகராஜன்.

11. பேசும் ஓவியம் - பா.மோகன்.

12. மணிமேகலைக் காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் - மு.ரமேஷ்.

13. சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும் - மு. ரமேஷ்.

14. குடைக்குள் கொடை - பா.சுமதி.

15. அனல் வீசும் பனித்துளிகள் - உ. மகேந்திரன்.

16. நிசப்த அலைகள் - தாஹிரா.

17. முப்பாவில் முப்பால் - பா. மோகன்.

18. இருள் என்பது குறைந்த ஒளியே - அ. வெங்கடேஷ்.

19. மணிமேகலை காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை - மு. ரமேஷ்.

20. நாச்சியார் பிள்ளைத்தமிழ் - பா. மோகன்.

21. தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் - இளஞ்சூரியன்.

22. சாஸ்தா பிறப்பு - சாரதா வேணுகோபால்.

23. திருக்குறளும் மணிமேகலையும் - மு. ரமேஷ்.

24. காத்திருப்பு - வே. சுகுமாரன்.

25. காட்டுவாத்துகள் - வே. சுகுமாரன்.

26. எங்கிருந்து வந்தாள் - வே. சுகுமாரன்.

27. நெருப்பு நிஜங்கள் - வே. சுகுமாரன்.

28. நியாயங்கள் காயப்படுவதா? - வே. சுகுமாரன்.

29. தொல் பனுவல்களும் பன்முக நோக்கும் - கு. பத்மநாபன்.

30. உயிர்க்காடு - கு. பத்மநாபன்.

31. காதல் மெய்ப்பட - அற்புதம்.

32. நெஞ்சில் நிறைந்தவை - அற்புதம்.

33. தனித்துவம் பேணிடாத் தமிழர் - அற்புதம்.

34. கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் - வரதராஜ்.

35. Everlasting Efforts: A Review of Services to the Blind - Dr. K. radhabai.

36. கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் - மு. முருகேசன்.

37. புன்னகை அரும்புகள் - நா. ஆனந்தி

38. என் விழிக்கொரு தீபம் - நா. ஆனந்தி

39. பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும் - CSGAB.

40. இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள் - CSGAB.

41. பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன் - CSGAB.

42. தமிழ் வனம் பகுதி 1  - அந்தகக்கவிப் பேரவை.

43. தமிழ் வனம் பகுதி 2 - அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சில புத்தகங்கள் விற்பணைக்கு உள்ளன. எனவே, பொதுவாக விற்பனைக்காக உள்ள புத்தகங்களின் அரங்குகளை முதலில் குறிப்பிட்டுள்ளேன்.

புத்தகங்களை வாங்கி படித்து தங்களின் மேலான ஆதரவை வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி.

சேதுபாண்டி