செவ்வாய், 11 அக்டோபர், 2016

உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வு ஜனவரி 2017



உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வு ஜனவரி 2017
உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து 17.10.2016   முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.11.2016 .
தேர்விற்கான கட்டணத்தை பதிவிறக்கப்பட்ட படிவம் மூலம் வங்கியில் செலுத்த கடைசி நாள்  17.11.2016.
தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிகள்
SYNDICATE/CANARA/ICICI/HDFC BANK.
வலைத்தளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள  வேண்டிய நாட்கள் 22 முதல்  29 நவம்பர்  2016 வரை.
நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்படும் நாள் 21.12.2016.     
தேர்வு நடைபெறும் நாள் 22.01.2017.  
மேலதிக விவரங்கள்/விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி
தேர்வில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

வியாழன், 8 செப்டம்பர், 2016

அந்தகக்கவிப் பேரவை



அந்தகக்கவிப் பேரவை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
பார்வையற்றோர் தங்கள் தமிழறிவை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பேரவை உருபெற்றுள்ளது. எழுத்தாற்றல் பேச்சாற்றல் ஆய்வுத்திறன் மற்றும் தமிழ்நுட்பத்திறன் போன்றவற்றில் தங்களை வளர்த்துக்கொள்ள, தங்களைத் தாங்களே பயிற்றுவித்துக்கொள்ள தோன்றியது அந்தகக்கவிப் பேரவை. இப்பேரவை உருவான விதம் பின்வருமாறு.
பல ஆண்டுகளாக சத்யசாய் பக்தர்கள்  வள்ளுவர் கோட்டத்தின் அருகில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பார்வையற்றோருக்கு புத்தகங்களை  வாசித்தும், ஒலிப்பதிவு செய்தும் வழங்கி வருவதை அனைவரும் அறிவோம். இச்சேவையின் மூலம் பயன்பெற்று உயர்ந்தநிலையை அடைந்தவர்கள் பலர். இந்த வாசிப்பகத்திற்கு சென்று பயன்பெற்ற சிலர், வாசிப்பகம் முடிந்ததும்  சிறுக்கூட்டமாக கூடி இலக்கியம் உள்ளிட்ட பல செய்திகளைக் கலந்துரையாடி வந்தனர். இப்படி பல செய்திகளை வரையறையின்றி  பேசுவதற்கு பதிலாக  முறையான கூட்டமாக நெறிப்படுத்தி கலந்துரையாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக தோன்றியதே அந்தகக்கவிப் பேரவை. இப்பேரவைக்கு அந்தகக்கவிப் பேரவை என்று பெயரிட காரணம் என்ன என்பதை இனி காண்போம்.
தொல்காப்பியன், வள்ளுவன் கம்பன், பாரதி என தமிழை வளர்த்தெடுத்து நிலைநிறுத்தியப் புலவர்கள் பலரும் வான்முட்டும் புகழ்ப்பெற்று வாழ்ந்து வருகின்றனர். அந்த  அளவிற்கு இல்லை என்றாலும் எங்கள் அந்தகக்கவியை ஓரளவேனும் நினைவில் இருத்தி, அவரை உயர்த்தி பார்வையற்றோரை தமிழ் உலகிற்கு அடையாளப்படுத்தும் பொருட்டு இப்பெயர் இடப்பட்டது. அந்தகக்கவி வீரராகவ முதலியார் குறித்த சில குறிப்புகள் பின்வருமாறு.
·         இவர் தொண்டை நாட்டில் பிறந்தவர்.
·         பிறவியிலேயே பார்வையற்றவர்.
·         முதுகில் எழுதச்சொல்லிக் கற்றவர்.
·         கவிஞர், இசைஞானம் உள்ளவர், ஆசிரியர்.
·         பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, கோவை போன்ற இலக்கியங்களைப் படைத்தவர்.
·         இலங்கைக்கு சென்று அரசன் பரராசசிங்கனிடம்  தம் கவிதைக்காக பரிசுகள் பெற்று வந்தவர்.
·         இவர் பாடிய நூல்கள்
1. திருக்கழுக்குன்றப் புராணம்
2. திருக்கழுக்குன்ற மாலை
3. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
4. திருவாரூர் உலா.
5. சந்திரவாணன் கோவை
மற்றும் பல தனிப்பாடல்கள்.

பேரவையின் செயல்பாடுகளாவன, ஒவ்வொரு மாதமும் ஒருவர் அவருக்கு விருப்பமான தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்க, மற்றவர்கள் அதில் தோன்றும் ஐயங்களை எழுப்பித் தெளிவு பெறுதல், புதிய நூல்கலை அறிமுகம் செய்தல், பல்துறை தமிழ் அறிஞர்களை அழைத்து துறைசார்ந்த அறிவை விரிவு செய்தல் என்ற முறைமைகளில் கூட்டங்கள் நடைபெறும்.
கூட்டங்கள்  கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் என ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறும். இடம் குறித்தத் தகவல் அவ்வப்போது அறிவிக்கப்படும். முதல் கூட்டம் ஆகஸ்ட் 28 2016 ஞாயிற்றுக் கிழமை 1.30 மணி முதல் 3.30 மணி வரை பத்மசேஷாத்ரி பள்ளியின் அருகில் ஓர் மரத்தடியில் நடைபெற்றது.
மாநிலக்கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.சக்திவேல், செய்யாறு அரசுக் கல்லூரியில் விருந்தமை விரிவுரையாளராக உள்ள திரு. பிரதீப், மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராக உள்ள திரு. ராமன், ராணிமேரிக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.சுதன்,,, உத்திரமேரூர் அரசுக் கல்லூரி விருந்தமை விரிவுரையாளர் திரு. பானுகோபன், மாநிலக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.செல்வமணி, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் திரு.பாண்டியராஜ், ராணிமேரிக்கல்லூரி முனைவர் பட்ட  ஆய்வாளர் திரு. லட்சுமிநாராயணன், ராணிமேரிக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி.வத்சலா லட்சுமிநாராயணன், திருவஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி தமிழாசிரியர் திரு.வெங்கடேசன், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.சிவக்குமார் போன்றோர் இணைந்து இப்பேரவையைத் தொடங்கியுள்ளனர். அனைவரும் தமிழ்த்துறையினர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. திரு. பிரதீப் தலைவராகவும், திரு.ராமன் செயலாளராகவும், திருமதி.வத்சலா பொருளாளராகவும் செயல்படுகின்றனர்.
அனைவரும் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

‘‘பழந்தமிழில் சமூக – சமய - மரபுகளும், பனுவலாக்கக் கோட்பாடுகளும்”

‘‘பழந்தமிழில் சமூக – சமய - மரபுகளும், பனுவலாக்கக் கோட்பாடுகளும்” (மு.ரமேஷ்) நூலுக்கான அறிமுககூட்டம்
        அன்புடையீர் வணக்கம்!

வருகின்ற 3-9-2016. சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை -41 திருவான்மியூர், திருவள்ளுவர் சாலை 112 முதல் தளம், பனுவல் புத்தக அரங்கில்  ‘‘பழந்தமிழில் சமூக – சமய - மரபுகளும், பனுவலாக்கக் கோட்பாடுகளும்” (மு.ரமேஷ்) நூலுக்கான அறிமுககூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாடுவோர்
.வெளி. ரங்கராஜன் (நாடகவியலாளர்) கஜேந்திரன் (ஊடகவியலாளர்) அபிலாஷ் (எழுத்தாளர்) இராமன் (எழுத்தாளர்), இளங்கோவன் (சாகித்திய அகாதமி பொறுப்பாளர், தமிழ்நாடு) கந்தசாமி (ஆய்வாளர் புதுச்சேரி) தமிழாசான் (கல்வியாளர்) கெ.குமார் பேராசிரியர் மாநிலகல்லூரி. மு.முருகேசன் பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர் சேலம். பத்மநாபன் பேராசிரியர் மொழிபெயர்ப்பு துறை, திராவிட பல்கலைக் கழகம் குப்பம் ஆந்திரா. சிவராஜ் (ஆய்வாளர் தமிழியர்புலம் புதுவைப் பல்கலைக்கழகம். பிரகாஷ் ஆய்வாளர் தமிழ்த்துறை அறிஞர் அரசு கலைக்கல்லூரி வடசென்னிமலை ஆத்தூர் சேலம். பிரேமதாசன் மென்பொறியாளர் திருவான்மியூர். உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாடுகிறார்கள்.
அனைவரும் வருக!.
மு. ரமேஷின் பிறநூல்கள்
கவிதை நூல்கள்
1. என் தேசத்தின் ஜதிகள் 2002.
2. வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் 2005.
3. மழையில் கரையும் இரவின் வாசனை 2007.
சிறுகதை
1.    நிழல் சுடுகிறது 2011.
கட்டுரை நூல்கள்
1.    காட்சியதிகாரம் 2008.
2.    கவிதை இயல் மறுவாசிப்பு 2009.
3.    வரலாற்றுப் பன்மையும்  தேசிய ஒடுக்கமும் 2012.
4.    பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும் 2015.
5.    ஓர் அடிமை உடலும் மூன்று சொற்களும் (வெகுவிரைவில் வர இருக்கிறது.)

இந்த புத்தகத்தை முன்கூட்டி படிக்க விரும்புவோருக்காக செப்டம்பர் 3 ம் தேதி வரை 40% சலுகையில் வழங்கப்படும்.
தொடர்புக்கு ப. கஜேந்திரன் - 9894309067
--------------------------------- --------------------------------- --------------------------------- --------------------------------- --------------------------------- --------------------------------- ---------------------------------
Book launch function for the next creation of the famous Tamil writer ​ M. Ramesh on 3rd Sep, 2016 @ 10 am
If you are interested to read the book beforehand, we provide 40% off on the book till 3rd Sep, 2016
We cordially invite you to take part in the discussion about the book and share your thoughts.

Contact : P. Gajendran - 9894309067
தகவல் பேராசிரியர். கெ. குமார் அவர்களால் மின்னஞ்சல் மூலம் கிடைக்கபெற்றது.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம்


பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம்


24.05.2016 - 28.05.2016.
பதிவு செய்ய கடைசி நாள் - 06.05.2016.

அன்புடையீர்,

ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், அரிமா சங்கங்கள் மற்றும் ஸ்ரீநிக்கேதன் மேல்நிலைப் பள்ளி அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பார்வையற்றோருக்கான கணினிப் பயிலரங்கம் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். அப்பயிலரங்கம் இந்த ஆண்டு 24.05.2016 செவ்வாய் முதல் 28.05.2016 சனி வரை திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிக்கேதன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. வழக்கம் போல தங்குமிடம் உணவு உள்ளிட்ட  வசதிகள் செய்துத்தரப்படும். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக மடிக்கணினி கொண்டுவர வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,, தாங்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக்  குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை வரும் 06.05.2016 வெள்ளிக்கிழமைக்குள் திரு. ர. ராஜா  அவர்களிடம்  தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 150  செலுத்தி  தங்கள் வரவை உறுதி செய்துக்கொள்ளுபடிக் கேட்டுக்கொள்கிறோம்.  திரு. ர. ராஜா அவர்களைத் தொடர்புக்கொள்ள வேண்டிய செல்பேசி எண் 99 40 39 38 55. முதலில் பதிவு செய்யும் 50  நபர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.

பிரிவுகள்


1.தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப்  பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம்.

2.மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம்.

3.மைக்ரோசாஃப்ட் எக்சல் மற்றும் இணையம்.

4.மைக்ரோசாஃப்ட் பவர் பாய்ண்ட், லிப்ரா ஆஃபிஸ் மற்றும்  மென்பொருள் நிறுவுதல் நீக்குதல்.

அனைத்து பிரிவினருக்கும் தமிழ்த் தட்டச்சு பயிற்றுவிக்கப்படும்.

இறுதி நாள் அன்று அனைவருக்கும் பொதுவாக புக் ஷேர் பயன்பாடு மற்றும் ஆண்டிராய்டு சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ் எழுத்துணரி OCR குறித்து வகுப்புகள் நடைபெறும்.

வகுப்பு நடைபெறும் முறை


§  குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

§  பிரிவு நான்கு தவிற மற்ற பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள் அமர்த்தப்படுவர்.

§  தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.

§  வகுப்புகள் காலை 09.30 மணி முதல் 01.00 மணி வரையிலும் மீண்டும் 03.30 மணி முதல் 07.00 மணி வரையிலும் நடைபெறும்.

§  கோடைக்காலம் என்பதால் உணவு இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

§  காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும்

பயிற்சி விதிமுறைகள்


§  அனைவரும் கட்டாயம் மடிக்கணினி கொண்டுவர  வேண்டும்.

§  இணைய வசதி செய்துத்தரப்படும் இருப்பினும் கூடுமான வரை இண்டர்நெட் மோடம் கொண்டுவருவது நல்லது.

§  பிரிவு 2, 3, 4இல்  கலந்துக்கொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

§  பிரிவு நான்கில் பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து செல்வர்.

மேலதிக விவரங்களுக்கு


திருமதி. பத்மா ஆனந்த் – 96 00 02 68 91.

திரு. ர. ராஜா – 99 40 39 38 55.

திரு. சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63.

நன்றி.....

திங்கள், 21 மார்ச், 2016

தம் வாசிப்பாளருக்கு பாராட்டு விழா நடத்திய பார்வையற்ற பேராசிரியர்!


தம் வாசிப்பாளருக்கு பாராட்டு விழா நடத்திய பார்வையற்ற பேராசிரியர்!

வைணவ கல்லூரியின் கணித பேராசிரியர், பை கணித மன்றத்தின் நிறுவனர் ரா.சிவராமன் என்கிற ராம்ஜி அவர்கள் எழுதிய கட்டுரைகள்,  அவர் விருது பெற்றது தொடர்பாக தமிழ் இந்து தினமணி போன்ற நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள் என பல்வேறு செய்திகள் நம் குழுமத்தில் பகிரப்பட்டு, அனைவரும் படித்திருக்கிறோம். அத்தகு சிறப்பு மிகுந்த பேராசிரியருக்கு தற்போது சமூகத்தில் உள்ள கடைநிலை மக்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்திய அரசு தேசிய விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

பல விருதுகளுக்கு சொந்தக்காரரான  இவருக்கு தற்போது தேசிய விருது கிடைத்திருப்பது இவரால் பயனடைந்து வாழ்வில் உயர்ந்துள்ள பல பார்வையற்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக பார்வையற்றவர்களுக்கு விழியாக இருந்து வழிக்காட்டி வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவர் குடும்பமே பார்வையற்றோருக்காக பாடங்களைப் படித்துக்காட்டி சேவைப்புரிந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இப்படி சேவைப்புரிந்து வரும் இவரால் வழிக்காட்டப்பட்டு இன்று பேராசிரியராக உயர்ந்துள்ள மாநிலக்கல்லூரி பேராசிரியர் கெ. குமார் ஐயா அவர்கள் இவருக்காக இன்று எக்மோரில் உள்ள ஜீவன் ஜோதியில் பாராட்டு விழா நடத்தி ஐயாவை சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் மாநிலக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் அர. ஜெயச்சந்திரன்  அவர்கள், பேராசிரியர். உத்திராபதி அவர்கள், பேராசிரியர். வேலு அவர்கள், பேராசிரியர். பழனி அவர்கள், பேராசிரியர். பசுபதி அவர்கள், திருவாரூர் அரசுக்கல்லூரி பேராசிரியர். செந்தில் அவர்கள், காரைக்குடி அரசுக்கல்லூரி பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பொன்னேரி அரசுக்கல்லூரி பேராசிரியர். திவாகர் அவர்கள், பேராசிரியர் நாகராஜன் அவர்கள், மேலும் பல ஆசிரியர்கள் ஆய்வாளர்கள்  என பலர் பங்கேற்று ஐயா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இறுதியில் ஏற்புரை வழங்கிய பேராசிரியர் சிவராமன் அவர்கள் நான் விருதுப் பெற்றதற்கு எங்கும் கிடைக்காத அளவிற்கு மகிழ்ச்சியும் அங்கீகாரமும் இங்கு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் பார்வையற்றோர் எளிதில் கணிதத்தைப் புரிந்துக்கொள்ளும் வகையில் சிறந்த முறையில் ஒரு நூல் எழுதத் திட்டமிட்டுள்ளதாகவும் அது என் சமுதாயக் கடமை என்றும் ஆர்வமுடன் குறிப்பிட்டார்.  ஆய்வாளர். டேவிட்  அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. இவ்விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்த  விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குமார் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் விருது பெற்றது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தி பின்வருமாறு....

அறிவியல் விழிப்புணர்வு :3 பேருக்கு தேசிய விருது

By சென்னை

First Published : 12 March 2016 03:44 AM IST

அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா புதுதில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 11 பேருக்கு விருதுகளையும், ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் வழங்கினார்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை து.கோ. வைணவக் கல்லூரியில் கணித பேராசிரியர், பை கணித மன்றத்தின் நிறுவனர் ரா.சிவராமன், ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் கணேசன், திருசெங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியரான வெ.ராஜேந்திரன் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இதில், சிவராமனின் பல கணித நூல்கள், தமிழக அரசின் சிறந்த அறிவியல் புத்தகப் பரிசை தொடர்ச்சியாக 2 முறையும், திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்டவைகளை பெற்றுள்ளது. மேலும், கணிதத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில் சொற்பொழிவுகள், பயிலரங்கத்தையும் நடத்தியுள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2016/03/12/

உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!


உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சக்தி மண்டல் சகயோக் சார்பில் மகளிர் தினம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில்  பல்துறை பெண்களுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் பார்வையற்ற சமூகத்திற்காக பல ஆண்டுகளாக தம் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பார்வையற்ற பெண் செல்வி. முத்துச்செல்வி  அவர்களுக்கு சிறந்த  சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.

இவர், பார்வையற்றோருக்கான உரிமை, பாதுகாப்பு, இட ஒதுக்கீடு என்ர பிரச்சணைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் போன்றவற்றில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக அகிலஇந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் செயலாலராக செயலாற்றி வருகிறார். இவர் மெம்மேலும் பல சாதணைகள் புரிய எல்லாம் வள்ள இறைவன் அருள்புரியட்டும். வாழ்த்துகள்!

நன்றி...