பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம்
24.05.2016
- 28.05.2016.
பதிவு செய்ய கடைசி நாள் - 06.05.2016.
பதிவு செய்ய கடைசி நாள் - 06.05.2016.
அன்புடையீர்,
ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், அரிமா சங்கங்கள் மற்றும்
ஸ்ரீநிக்கேதன் மேல்நிலைப் பள்ளி அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பார்வையற்றோருக்கான
கணினிப் பயிலரங்கம் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். அப்பயிலரங்கம் இந்த ஆண்டு
24.05.2016 செவ்வாய் முதல் 28.05.2016 சனி வரை திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிக்கேதன்
மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. வழக்கம் போல தங்குமிடம் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்துத்தரப்படும். இதில் பங்கேற்க
விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக மடிக்கணினி கொண்டுவர வேண்டும் என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,,
தாங்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள
பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட
அடிப்படைத் தகவல்களை வரும் 06.05.2016 வெள்ளிக்கிழமைக்குள் திரு. ர. ராஜா அவர்களிடம்
தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 150
செலுத்தி தங்கள் வரவை உறுதி
செய்துக்கொள்ளுபடிக் கேட்டுக்கொள்கிறோம்.
திரு. ர. ராஜா அவர்களைத் தொடர்புக்கொள்ள வேண்டிய செல்பேசி எண் 99 40 39 38
55. முதலில் பதிவு செய்யும் 50 நபர்கள்
மட்டுமே பங்கேற்க இயலும்.
பிரிவுகள்
1.தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப்
பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம்.
2.மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம்.
3.மைக்ரோசாஃப்ட் எக்சல் மற்றும் இணையம்.
4.மைக்ரோசாஃப்ட் பவர் பாய்ண்ட், லிப்ரா ஆஃபிஸ் மற்றும் மென்பொருள் நிறுவுதல் நீக்குதல்.
அனைத்து பிரிவினருக்கும் தமிழ்த் தட்டச்சு பயிற்றுவிக்கப்படும்.
இறுதி நாள் அன்று அனைவருக்கும் பொதுவாக புக் ஷேர் பயன்பாடு மற்றும்
ஆண்டிராய்டு சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ் எழுத்துணரி OCR குறித்து வகுப்புகள் நடைபெறும்.
வகுப்பு நடைபெறும் முறை
§
குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள்
ஏற்படுத்தப்படும்.
§
பிரிவு நான்கு தவிற மற்ற பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள்
அமர்த்தப்படுவர்.
§
தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.
§
வகுப்புகள் காலை 09.30 மணி முதல் 01.00 மணி வரையிலும் மீண்டும் 03.30
மணி முதல் 07.00 மணி வரையிலும் நடைபெறும்.
§
கோடைக்காலம் என்பதால் உணவு இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
§
காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும்
பயிற்சி விதிமுறைகள்
§
அனைவரும் கட்டாயம் மடிக்கணினி கொண்டுவர வேண்டும்.
§
இணைய வசதி செய்துத்தரப்படும் இருப்பினும் கூடுமான வரை இண்டர்நெட்
மோடம் கொண்டுவருவது நல்லது.
§
பிரிவு 2, 3, 4இல்
கலந்துக்கொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு
பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
§
பிரிவு நான்கில் பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக
கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு
தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து செல்வர்.
மேலதிக விவரங்களுக்கு
திருமதி. பத்மா ஆனந்த் – 96 00 02 68 91.
திரு. ர. ராஜா – 99 40 39 38 55.
திரு. சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63.
நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக