வெள்ளி, 11 செப்டம்பர், 2026

தமிழ்ப்பெருந்தகைச் சான்றோர் சாலமன் பாப்பையா 🙏🙏🙏😭

பாமர மக்களும் சங்க இலக்கியம் உள்ளிட்ட செவ்வியல் இலக்கியங்களில் புதைந்திருக்கும் உயரிய கருத்துக்களை புரிந்துக்கொள்ளும்படி எளிமைப்படுத்தி அறியத்தந்த மாபெரும் தமிழ் அறிஞர் பேராசான்  பத்மஸ்ரீ  கலைமாமணி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு மகாக்கவி மறைந்த போது தமிழ்ச்சமூகம் அடைந்த வேதனையைவிட தற்போது அதே நாளில் நம்மை ஆற்றொன்னா துயரத்தில் ஆழ்த்தி சென்ற பேராசானின் பெருமைகளைச் சொல்லில் வடித்திட இயலாது.


 

படத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா & மகாக்கவி பாரதியார்

(பட ஆக்கம்gemini AI)

நான் படிக்கும் காலத்தில் தொலைக்காட்சிகளில் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி இலக்கியங்கள் உள்ளிட்ட இலக்கியங்களை நடைமுறை வாழ்வோடு ஒப்பிட்டு எளிமைப்படுத்தி அறியத்தந்த உரைகளை ஒருநாளும் மறக்க இயலாது. பட்டிமன்றங்களின் வாயிலாக சமூகநீதி கருத்துக்களை   விதைத்து, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட  ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் என்று சொன்னால் மிகையில்லை. ஐயா அவர்களை இழந்து தவிக்கும் நம் அனைவரின் உள்ளத்திலும் ஐயா தமிழ்ப்ப்ஓல் என்றும் வாழ்வார்கள்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக