நமது நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு
ஆண்டும், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின்
பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம்
நாள் திருத்தனியில் பிறந்தார். பெற்றோர் சர்வபள்ளி வீராசாமி சீதம்மா.
சிறுவயதிலேயே
கற்பதில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர்,தத்துவயியல் பாடத்தை தனது விருப்ப பாடமாக
தெரிவு செய்து படித்தார். பின்பு பல தத்துவ நூல்களை முயன்று கற்றார். உலகிலேயே
மிகப்பெரிய தத்துவ மேதையாக திகழ்ந்தார். ஆசிரியர் பணியை தெரிவு செய்து, சென்னை
மாநிலக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் பேராசிரியராகவும், பல்கலைக் கழக
துணைவேந்தராகவும் பணி புரிந்து, ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்துள்ளார். 1948 ஆம்
ஆண்டு பல்கலைக் கழக குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பரிந்துரைகள் இந்திய
கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகை செய்தன. 1952 முதல் 1962 வரை, முதல் இந்திய
குடியரசுத் துணை தலைவராக இருந்தார். 1962 முதல் 1967 வரை, இரண்டாவது இந்திய
குடியரசு தலைவராக இருந்தார். இவருக்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இத்தனை சிறப்பிற்குரிய இவர், 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள், தனது 86 ஆவது
வயதில் இயற்கை எய்தினார்.
ஆசிரியர்களுக்கு
இருக்க வேண்டிய ஒழுக்கம், நன் நடத்தை, பொருமை, சகிப்பு தன்மை, பணிவு, நுனுக்கமான
அறிவு, எளிய முறையில் கற்பிக்கும் திறம் என அத்தனை தகுதிகளையும் தன்னகத்தே கொண்டு
வாழ்ந்தமையால், இவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக அனைவராலும் மதித்து
போற்றப்படுகிறது. இன்நன் நாளில் ஆசிரியர்களும், ஆசிரியராக பணிபுரிய காத்திருக்கும்
ஒவ்வொருவரும், தனது தனிப்பட்ட திறன்களையும், அறிவையும் மதிப்பிட்டு மேம்படுத்திக்கொள்வது
அவசியமாகும். வேகமாக வளர்ந்து வரும் இந்த கணினிமயமான உலகில், ஆசிரியர்
ஒவ்வொருவருக்கும் அறிவுத் தேடல் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு
செயல்பட்டால் மட்டுமே இன்றைய அறிவார்ந்த மாணவர்களுக்கு, தெளிவாக கற்பிக்க இயலும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்
தின நல் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக