புதன், 11 செப்டம்பர், 2013

பார்வையற்றோருக்கான கணினி பயிலரங்கம்



அன்புடையீர் வணக்கம்,
      சென்னையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக  வாசிப்பகம் நடத்துதல், கல்விக் கட்டணம் வழங்குதல்,  உள்ளிட்ட பல சேவைகளை புரிந்து வரும் ப்ரேர்னா அமைப்பைப் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். தற்போது இவ்வமைப்பு,  ஏழை மக்களுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் பல சேவைகளை செய்து வரும்  அரிமா சங்கத்துடன் இணைந்து, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று நாள் கணினி பயிலரங்கம் ஒன்றை வரும் 27/09/2013 முதல் 29/09/2013 வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்பயிலரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், வரும் 20/09/2013குல், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் தொடர்புக்கொண்டு முன் பதிவு செய்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் 100 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கணினியைக் கற்க விருப்பம் உள்ள அனைவரும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம். கணினியில் ஓரளவிற்காவது விசைப்பலகையை பயன்படுத்த அறிந்திருத்தல் அவசியம். இப்பயிலரங்கத்தில் அமர்வுகள் விரிவுரை மற்றும் செய்முறை  முறையில் அமைக்கப்பட உள்ளன. எனவே, மடிக்கணினி வைத்திருப்போர் கொண்டு வரலாம், மடிக்கணினிக் கொண்டுவர இயலாதவர்கள், பயிற்றுனர்கள் விலக்கும் முறையை கவனித்து பயன் பெறலாம்.
நடைபெறும் இடம் : கோல பெருமாள் பள்ளி, டி.ஜி வைஷ்ணவா கல்லூரி அருகில், அரும்பாக்கம், சென்னை.
நேரம் : காலை 09.00 முதல் மாலை 05.00 வரை
இப்பயிலரங்கம்,, அடிப்படைக் கணினி பயன்பாடு, மைக்ரோசாஃப்ட் வேட், மைக்ரோசாஃப்ட் எக்சல், மின் அஞ்சல் மற்றும் இணைய பயன்பாடு, ஆடியோ எடிட்டிங், பள்ளி கல்லூரிகளில் கணினி பயன்பாடு, அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் கணினி பயன்பாடு போன்ற தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.
பயிலரங்க அமர்வுகள்
முதல் நாள்:
1.      அடிப்படை கணினி பயிற்சி மற்றும் மைக்ரோசாஃப்ப்ட் வேட்
திரு. S. பாண்டியராஜ், ஆய்வு மாணவன், தமிழ்த் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
2.      என் வி டி ஏ பயன்பாடு
திரு. நவரசன் M.A மாணவர், ஆங்கிலத் துறை, மாநிலக் கல்லூரி,               சென்னை.
3.      கணினியில் தமிழ் பயன்பாடு
Dr S.  திவாகர், பேராசிரியர், தமிழ்த் துறை, இராணி மேரி கல்லூரி, சென்னை.
4.      மைக்ரோசாஃப்ட் எக்சல்
திரு. வெற்றிவேல் முருகன், Ph.D ஸ்காலர், தி நியு ஸ்கூல் ஃபார் சோசியல் ரிஸேர்ச் நியுயார்க், அமெரிக்கா.
இரண்டாம் நாள்:
5.      இணையம் பகுதி – 1.
திரு. யு. மகேந்திரன், Ph.D ஸ்காலர், ஆங்கிலத் துறை,   பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
6.      இணையம் பகுதி – 2
திரு. நாகராஜன், கணினி பயிற்றுனர், இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை.
7.      இணையம் பகுதி – 3
திரு. முருகானந்தம் Ph.D ஸ்காலர், ஆங்கிலத் துறை,  பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
8.      கணினி மேலாண்மை
திரு. ராதாக்ருஷ்ணன், தமிழ் ஆசிரியர், அரசு பள்ளி, கள்ளக்குரிச்சி.  
9.      ஆடியோ எடிட்டிங்
திரு எம். பார்த்திபன், கெனரா பேங்க், சென்னை.
மூன்றாம் நாள்:
10.   அரசு அலுவலகங்களில் கணினி & OCR பயன்பாடு
திரு. B. கண்ணன், நியு இன்டியா அசுரன்ஸ், சென்னை.
11.   வங்கிகளில் கணினி பயன்பாடு
திரு. D. மணி, துணை மேலாளர், இந்தியன் ஓவர்சிஸ் பேங்க், மண்டல அலுவலகம் 2, சென்னை.
12.   பள்ளி மற்றும் கல்லூரிகளில் கணினி பயன்பாடு
திரு. சபாஷ்ராஜ், தமிழ் ஆசிரியர், கடலூர்.
13.   பார்வையற்றோருக்கான கணினி சார் பணிகள்
திரு. S. சங்கர், இயக்குனர், அகேட் இன்ஃபோடெக் நிறுவனம் சென்னை.
14.   வினா விடை பகுதி.

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்:
திருமதி. பத்மா 94 44 28 74 63
பாண்டியராஜ் 98 41 12 91 63
நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக