'அன்ன சத்திரம் ஆயிரம்
வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள
தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
எழுத்தறிவின்மையை போக்கும் பொருட்டு,, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்
எட்டாம் தேதி, உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் எழுத்தறிவு பெற
வேண்டும் என்ற நோக்கில், 1965 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நான், யுனெஸ்கோ நிறுவனம்,
செப்டம்பர் எட்டாம் தேதியை உலக எழுத்தறிவு நாளாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து,
1966 ஆம் ஆண்டு முதல் உலக எழுத்தறிவு தினம், அனைத்து நாட்டு மக்களாலும்
கொண்டாடப்பட்டு வறுகிறது.உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் எழுத்தறிவு பெறுதலின் அவசியத்தினை
உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உலகில் உள்ள ஒவொரு நாடும் தனது நாட்டில் எழுத்தறிவில்லாத
அனைவரும் எழுத்தறிவு பெறும் வகையில், முதியோர் கல்வி, இரவு பள்ளி, அறிவொளி
இயக்கம், கட்டாய அடிப்படைக் கல்வி போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மேதகு முன்னால் குடியரசு தலைவர், அப்துல்கலாம் ஐயா அவர்கள்
சொன்னது போல, நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேருக்காவது எழுத்தறிவித்தால்,
நாட்டில் எழுத்தறிவின்மை என்பதே இருக்காது. எனவே, இன்நன் நாளில் கூடுமான வரை குறைந்த
பட்சம் எழுத்தறிவில்லாத ஐந்து பேருக்காவது எழுத்தறிவின் அவசியத்தை உணர்த்தி,
கற்பிக்க உறுதி எடுப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக