சிறந்த எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், தமிழிசை வளர்ச்சிக்காக
பாடுப்பட்டவர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற சிறப்புக்களை உடைய அமரர். கல்கி அவர்கள்
தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை
பிடித்து, சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் ஆவார். இவர் 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9
ஆம் நாள், தஞ்சாவூரில் பிறந்தார். 114 ஆண்டுகளுக்கு பிறகும் இவரது எழுத்துக்கள்
வாசகர் மனதில் தனி இடம் பிடித்துள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள், புதினங்கள்,
கட்டுரைகள், புத்தகங்கள் என அனைத்தும் புது பொளிவுடன், காலத்துக்கேற்ற
கருத்துக்களை, தமிழ் சமுதாயத்திற்கு அளித்து வருகின்றன என்று சொன்னால் மிகையாகாது.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், கல்வனின்
காதலி, தியாக பூமி, அலை ஓசை போன்ற நூல்கள் இன்று வரை வாசகர்களால் அதிக அளவில்
விரும்பி வாசிக்கப்படும் நூல்களாகும். இவரது பல நூல்களும் கட்டுரைகளும், பல்கலைக்
கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல சிறப்புகளுக்கு
சொந்தக்காரரான அமரர் கல்கி அவர்கள், 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை
எய்தினார். இவரது புத்தகங்கள் 1998 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டன. இவருடைய புத்தகங்களை
படிக்க விரும்புவோர் http://www.projectmadurai.org/ என்ற
இணைய முகவரியில் சென்று பயன்பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக