வியாழன், 20 மார்ச், 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே இறுதிக்கு ஒத்தி வைப்பு



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு  மே இறுதிக்கு ஒத்தி வைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குப் பதிலாக, மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதி, வார வேலை நாளான திங்கள்கிழமையன்று வருகிறது. இதை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் வந்ததால், மே இறுதியில் உள்ள ஞாயிற்றுக்கிழமைக்கு தேர்வை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும்.
நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக