பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 23/05/2018 – 27/05/2018 பதிவு செய்ய கடைசி நாள்: 15/05/2018. அறிவிப்பை முழுமையாக படித்தபின் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு: புக் ஷேர், வாசிப்போம் வலைப்பக்கம் உள்ளிட்ட ஆன்லைன் நூலகங்களில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் பார்வையற்றவர் என்பதற்கான மருத்துவ சான்றிதழினையோ அல்லது தேசிய அடையாள அட்டையின் நகலினையோ கொண்டுவரும்படி கேட்டுக்கொள்கிறோம். அன்புடையீர், அரிமா சங்கங்கள், ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், மற்றும் கலிகி ரங்கநாதன் மான்ஃபோட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 23/05/2018 புதன் முதல் 27/05/2018 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும். இம்முறை ஏற்கனவே உள்ள நான்கு பிரிவுகள் மட்டுமல்லாமல் கூடுதலாக பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக மடிக்கணினி, சார்ஜர், இண்டர்நெட் மோடம், ஹெட்ஃபோன் போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,, தாங்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை வரும் 15/05/2018 செவ்வாய்க் ;?கிழமைக்குள் திரு. ர. ராஜா அவர்களிடம் தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 200 செலுத்தி தங்கள் வரவை உறுதி செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே தயவுக்கூர்ந்து தாங்கள் பங்கேற்க இயலுமா என்பதை உறுதி செய்தபிறகு பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பிரிவுகள் 1.கணினி அறிமுகம், தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப் பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம். 2.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம். 3.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் எக்சல் மற்றும் இணையம். 4. கணினி மேலான்மை, இயக்குதளம் (OS) நிறுவுதல், இதர மென்பொருள் நிறுவுதல் நீக்குதல், ஆடியோ எடிட்டிங், தமிழ் மற்றும் ஆங்கில ஒளிவழி எழுத்துணரி (OCR) பயன்படுத்துதல், மின் புத்தகம் உருவாக்குதல், வலைப்பக்கம் உருவாக்குதல், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துதல். 5. பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும். கற்பித்தலில் தொழில்நுட்பங்களைக் கையாளுதல், பல்லூடகம் துணைக்கொண்டு பாடத்திட்டம் உருவாக்குதல், கற்பித்தலுக்கான சிறப்பு மென்பொருள்கள் மற்றும் குறுஞ்செயலிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை. அனைத்து பிரிவினருக்கும் ஆண்டிராய்டு பயன்பாடு தேவைக்கேற்ப இடையிடையே பயிற்றுவிக்கப்படும். வகுப்பு நடைபெறும் முறை குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். பிரிவு நான்கு மற்றும் ஐந்து தவிற மற்ற பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள் அமர்த்தப்படுவர். தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும். வகுப்புகள் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையிலும் மீண்டும் 03.30 மணி முதல் 07.00 மணி வரையிலும் நடைபெறும். கோடைக்காலம் என்பதால் உணவு இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும் பயிற்சி விதிமுறைகள் · அனைவரும் கட்டாயம் மடிக்கணினி கொண்டுவர வேண்டும். · இண்டர்நெட் மோடம் கொண்டுவருவது நல்லது. · பிரிவு 2, 3, 4இல் கலந்துக்கொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். · பிரிவு நான்கு மற்றும் ஐந்தில் பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து செல்வர். · பிரிவு ஐந்தில் பங்கேற்பவர்கள் மைக்ரோசாஃப்ட் வேட், எக்சல், பவர்பாய்ண்ட், இணையம் உள்ளிட்டவற்றின் அறிமுக அறிவு பெற்றிருத்தல் அவசியம். பதிவு செய்பவர்களின் மேலான கவனத்திற்கு: பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களால் கலந்துக்கொள்ள இயலுமா என்பதை முடிவு செய்தபின் வரவை உறுதி செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கடந்த ஆண்டு பதிவு முடிந்த பிறகு பலர் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க இயலவில்லை. இறுதியில் பதிவு செய்த சிலர் வரவில்லை இதனால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே வரவை உறுதி செய்துக்கொண்ட பிறகு பதிவு செய்யவும். பங்கேற்பவர்கள் முழுமையாக ஐந்து நாட்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் ஒரு நாள் தாமதமாக வருவதோ, இடையில் ஒரு நாள் வெளியே செல்ல அனுமதி கேட்பதோ, இறுதியில் ஒருநாளைக்கு முன்னதாக புறப்படுவதோ அனுமதிக்கப்படமாட்டாது. நடைபெறும் இடம்: கலிகி ரங்கநாதன் மான்ஃபோட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர், சென்னை. மேலதிக விவரங்களுக்கு திருமதி. பத்மா ஆனந்த் – 96 00 02 68 91. திரு. ர. ராஜா – 99 40 39 38 55. திரு. சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63. நன்றி..... -- "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்றும் அன்புடன் சே. பாண்டியராஜ் இந்தியன் வங்கி சென்னை. வலைப்பக்கம்: www.sethupandi.blogspot.in
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” விழியாயிருந்து வழிக்காட்டி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
சனி, 12 மே, 2018
திங்கள், 17 ஏப்ரல், 2017
பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 10/05/2017
பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 10/05/2017
பதிவு செய்ய கடைசி நாள் – 28.04.2017.
அன்புடையீர்,
அரிமா சங்கங்கள், ப்ரேரனா ஹெல்ப் லைன்
ஃபௌன்டேஷன், மற்றும் கலிகி ரங்கநாதன் மான்ஃபோட்
மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப்
பயிலரங்கம் 10.05.2017 புதன் முதல் 14.05.2017 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும்.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக
மடிக்கணினி, சார்ஜர், இண்டர்நெட் மோடம் போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,, தாங்கள் பயன்படுத்தும்
திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள
பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட
அடிப்படைத் தகவல்களை வரும் 28.04.2017
வெள்ளிக்கிழமைக்குள் திரு. ர. ராஜா
அவர்களிடம் தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 200
செலுத்தி தங்கள் வரவை உறுதி
செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
திரு. ர. ராஜா அவர்களைத் தொடர்புக்கொள்ள வேண்டிய செல்பேசி எண் 99 40
39 38 55.
முதலில் பதிவு செய்யும் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க
இயலும். எனவே தயவுக்கூர்ந்து தாங்கள் பங்கேற்க இயலுமா என்பதை உறுதி செய்தபிறகு பதிவு
செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கடந்த ஆண்டு பதிவு முடிந்த பிறகு
பலர் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க
இயலவில்லை. இறுதியில் பதிவு செய்த பதினைந்து பேர் வரவில்லை இதனால் தேவை இல்லாத
குழப்பம் ஏற்படுகிறது. எனவே வரவை உறுதி செய்துக்கொண்ட பிறகு பதிவு செய்யவும். பங்கேற்பவர்கள் முழுமையாக ஐந்து நாட்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்
என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் ஒரு நாள் தாமதமாக வருவதோ, இடையில் ஒரு
நாள் வெளியே செல்ல அனுமதி கேட்பதோ, இறுதியில் ஒருநாளைக்கு முன்னதாக புறப்படுவதோ
அனுமதிக்கப்படமாட்டாது.
பிரிவுகள்
1.கணினி அறிமுகம், தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப் பயிற்சி, மைக்ரோசாஃப்ட்
வேட் மற்றும் இணையம் அறிமுகம்.
2.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம்.
3.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் எக்சல் மற்றும் இணையம்.
4. கணினி மேலான்மை, இயக்குதளம் (OS) நிறுவுதல்,
இதர மென்பொருள் நிறுவுதல் நீக்குதல், ஆடியோ எடிட்டிங், தமிழ்
மற்றும் ஆங்கில ஒளிவழி எழுத்துணரி (OCR) பயன்படுத்துதல், மின் புத்தகம் உருவாக்குதல், வலைப்பக்கம்
உருவாக்குதல், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துதல்.
அனைத்து
பிரிவினருக்கும் ஆண்டிராய்டு பயன்பாடு தேவைக்கேற்ப இடையிடையே பயிற்றுவிக்கப்படும்.
வகுப்பு நடைபெறும் முறை
·
குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு
பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
·
பிரிவு நான்கு தவிற மற்ற
பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள் அமர்த்தப்படுவர்.
·
தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப
பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.
·
வகுப்புகள் காலை 09.00 மணி முதல் 01.00 மணி
வரையிலும் மீண்டும் 03.30 மணி முதல் 07.00 மணி வரையிலும் நடைபெறும்.
·
கோடைக்காலம் என்பதால் உணவு
இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
·
காலை மற்றும் மாலை
வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும்
பயிற்சி விதிமுறைகள்
·
அனைவரும் கட்டாயம் மடிக்கணினி
கொண்டுவர வேண்டும்.
·
இண்டர்நெட் மோடம்
கொண்டுவருவது நல்லது.
·
பிரிவு 2,
3, 4இல்
கலந்துக்கொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு
பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
·
பிரிவு நான்கில்
பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி
பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து
கருத்துக்களைப் பகிர்ந்து செல்வர்.
நாள்:
10.05.2017 முதல் 14.05.2017 வரை.
இடம்:
கலிகி ரங்கநாதன் மான்ஃபோட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர், சென்னை.
மேலதிக
விவரங்களுக்கு
திருமதி.
பத்மா ஆனந்த் – 96 00 02 68 91.
திரு.
ர. ராஜா –
99 40 39 38 55.
திரு.
சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63.
நன்றி.....
திங்கள், 27 மார்ச், 2017
பார்வையற்றோருக்கான ஐந்துநாள் கணினி பயிலரங்கம்
பார்வையற்றோருக்கான ஐந்துநாள் கணினி பயிலரங்கம்
அன்புடையீர்,
அரிமா சங்கங்கள் மற்றும் ப்ரேரனா ஹெல்ப் லைன்
ஃபௌன்டேஷன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மே
மாதம் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தின் உதவியுடன் பார்வையற்றோருக்கான சிறப்பு
பயிலரங்கம் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். இந்த ஆண்டு 10/05/2017 புதன் கிழமை
முதல் 14/05/2017 ஞாயிற்றுக் கிழமை வரை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இடம் விரைவில்
உறுதி செய்யப்படும்.
கடந்த ஆண்டுகளில் கணினி தட்டச்சு தொடங்கி, மைக்ரோசாஃப்ட் வேட், எக்சல்,
பவர்பாய்ண்ட், இணையம், லிப்ரா ஆஃபிஸ், ஆண்டிராய்டு பயன்பாடு முதலியவற்றைக் கற்றோம். இந்த ஆண்டு நாம் எவ்வித
மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்த தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
பயிலரங்கம் குறித்து நாங்கள் கலந்துரையாடிய
போது பேரா. யு. மகேந்திரன் அவர்கள், பேரா.நாகராஜன் அவர்கள் உள்ளிட்ட கணினி
வல்லுநர்கள் நாம் திட்டமிடுவதைவிட கற்க போகிறவர்களின் எதிர்பார்ப்பை கேட்டறிந்து
திட்டமிடலாம் என்று தெரிவித்தனர். அதன்படி கணினியை சிறப்பாக பயன்படுத்திவரும்
சான்றோர்கள், கணினியை ஆர்வமுடன் கற்க விரும்பும் அறிஞர் பெருமக்கள் அனைவரும்
தங்களது மேலான கருத்துக்களை வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கணினி பயன்பாட்டில் இருந்து செல்பேசி பயன்பாட்டிற்கு மாறிவரும் இன்றைய
சூழலில் பயிலரங்கத்தை எவ்வாறு வடிவமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
என்பதையே தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எனவே கூடுமானவரை நண்பர்கள் அனைவரும்
ஆலோசனை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செல்பேசி: 98411 29163
நன்றி.
வியாழன், 12 ஜனவரி, 2017
தேதி மாற்றம் மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்
தேதி மாற்றம் மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்
05.02.2017.
ஜனவரி 22ஆம்
தேதி அன்று தேசிய அளவிலான உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால்
நம்முடைய பயிலரங்கம் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறமத்திற்கு வருந்துகிறோம்.
அன்புடையீர்,,
பணமற்ற இன்றய
சூழலில் நாம் மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பார்வையற்றோர் மின்னணு பண பரிவர்தனை பயன்பாட்டை கற்றுக்கொள்ளும் விதமாக,, ப்ரேரனா
ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் கோல்டன் ரோசஸ் அரிமா சங்கத்தின் சார்பாக
பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையம் மற்றும் ஆண்டிராய்டு குறுஞ்செயலிகள் மூலம் எவ்வாறு பணமற்ற நிலையை எதிர்க்கொள்வது
போன்றவை கற்பிக்கப்படும். ந்யு இண்டியா அசுரன்ஸ் நிர்வாக அதிகாரி திரு. பா.
கண்ணன் அவர்கள் பயிற்றுனராக பங்கேற்று
சிறப்பிக்க உள்ளார்.
நாள்: 05.02.2017
ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 09.45
- 01.00.
பதிவு
செய்யவேண்டிய நாட்கள்: 28.01.2017 முதல் 02.02.2017க்குள்.
தொடர்புக்கு:
சே. பாண்டியராஜ் 98 41 12 91 63.
இடம்: கோலப்
பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
கோலப்
பெறுமாள் பள்ளி தெரு,
அரும்பாக்கம், சென்னை.
நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)