திங்கள், 27 மார்ச், 2017

பார்வையற்றோருக்கான ஐந்துநாள் கணினி பயிலரங்கம்



பார்வையற்றோருக்கான ஐந்துநாள் கணினி பயிலரங்கம்

அன்புடையீர்,
அரிமா சங்கங்கள் மற்றும் ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும்  மே மாதம் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தின் உதவியுடன் பார்வையற்றோருக்கான சிறப்பு பயிலரங்கம் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். இந்த ஆண்டு 10/05/2017 புதன் கிழமை முதல் 14/05/2017 ஞாயிற்றுக் கிழமை வரை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இடம் விரைவில் உறுதி செய்யப்படும்.
கடந்த ஆண்டுகளில் கணினி தட்டச்சு  தொடங்கி, மைக்ரோசாஃப்ட் வேட், எக்சல், பவர்பாய்ண்ட், இணையம், லிப்ரா ஆஃபிஸ், ஆண்டிராய்டு பயன்பாடு  முதலியவற்றைக் கற்றோம். இந்த ஆண்டு நாம் எவ்வித மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்த தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
பயிலரங்கம் குறித்து நாங்கள் கலந்துரையாடிய போது பேரா. யு. மகேந்திரன் அவர்கள், பேரா.நாகராஜன் அவர்கள் உள்ளிட்ட கணினி வல்லுநர்கள் நாம் திட்டமிடுவதைவிட கற்க போகிறவர்களின் எதிர்பார்ப்பை கேட்டறிந்து திட்டமிடலாம் என்று தெரிவித்தனர். அதன்படி கணினியை சிறப்பாக பயன்படுத்திவரும் சான்றோர்கள், கணினியை ஆர்வமுடன் கற்க விரும்பும் அறிஞர் பெருமக்கள் அனைவரும் தங்களது மேலான கருத்துக்களை வழங்கும்படி  பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கணினி பயன்பாட்டில் இருந்து  செல்பேசி பயன்பாட்டிற்கு மாறிவரும் இன்றைய சூழலில் பயிலரங்கத்தை எவ்வாறு வடிவமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையே தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எனவே கூடுமானவரை நண்பர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்களது கருத்துகளை pandiyaraj18@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம்.
செல்பேசி: 98411 29163
நன்றி.

வியாழன், 12 ஜனவரி, 2017

தேதி மாற்றம் மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்



தேதி மாற்றம் மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்

05.02.2017.
ஜனவரி 22ஆம் தேதி அன்று தேசிய அளவிலான உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால் நம்முடைய பயிலரங்கம் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறமத்திற்கு வருந்துகிறோம்.
அன்புடையீர்,,
பணமற்ற இன்றய சூழலில் நாம் மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பார்வையற்றோர் மின்னணு பண பரிவர்தனை பயன்பாட்டை கற்றுக்கொள்ளும் விதமாக,, ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் கோல்டன் ரோசஸ் அரிமா சங்கத்தின் சார்பாக பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இணையம் மற்றும் ஆண்டிராய்டு குறுஞ்செயலிகள் மூலம் எவ்வாறு பணமற்ற நிலையை எதிர்க்கொள்வது போன்றவை கற்பிக்கப்படும். ந்யு இண்டியா அசுரன்ஸ் நிர்வாக அதிகாரி திரு. பா. கண்ணன்  அவர்கள் பயிற்றுனராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
நாள்: 05.02.2017 ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 09.45 - 01.00.
பதிவு செய்யவேண்டிய நாட்கள்: 28.01.2017 முதல் 02.02.2017க்குள்.
தொடர்புக்கு: சே. பாண்டியராஜ் 98 41 12 91 63.
இடம்: கோலப் பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
கோலப் பெறுமாள் பள்ளி தெரு,
அரும்பாக்கம்,  சென்னை.
நன்றி.

சனி, 7 ஜனவரி, 2017

மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்



மின்னணு பண பரிவர்தனை பயன்பாடு - பார்வையற்றோருக்கான பயிலரங்கம்

அன்புடையீர்,,
பணமற்ற இன்றய சூழலில் நாம் மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பார்வையற்றோர் மின்னணு பண பரிவர்தனை பயன்பாட்டை கற்றுக்கொள்ளும் விதமாக,, ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் கோல்டன் ரோசஸ் அரிமா சங்கத்தின் சார்பாக பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இணையம் மற்றும் ஆண்டிராய்டு குறுஞ்செயலிகள் மூலம் எவ்வாறு பணமற்ற நிலையை எதிர்க்கொள்வது போன்றவை கற்பிக்கப்படும். திரு. பா. கண்ணன்  அவர்கள் பயிற்றுனராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
நாள்: 22.01.2017 ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 09.45 - 12.45.
பதிவு செய்யவேண்டிய நாட்கள்: 16.01.2017 முதல் 19.01.2017க்குள்.
தொடர்புக்கு: சே. பாண்டியராஜ் 98 41 12 91 63.
இடம்: கோலப் பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
கோலப் பெறுமாள் பள்ளி தெரு,
அரும்பாக்கம்,  சென்னை.
நன்றி.

செவ்வாய், 11 அக்டோபர், 2016

உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வு ஜனவரி 2017



உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வு ஜனவரி 2017
உதவிப் பேராசிரியருக்கான தேசிய தகுதித் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து 17.10.2016   முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.11.2016 .
தேர்விற்கான கட்டணத்தை பதிவிறக்கப்பட்ட படிவம் மூலம் வங்கியில் செலுத்த கடைசி நாள்  17.11.2016.
தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிகள்
SYNDICATE/CANARA/ICICI/HDFC BANK.
வலைத்தளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள  வேண்டிய நாட்கள் 22 முதல்  29 நவம்பர்  2016 வரை.
நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்படும் நாள் 21.12.2016.     
தேர்வு நடைபெறும் நாள் 22.01.2017.  
மேலதிக விவரங்கள்/விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி
தேர்வில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.