என்
மனம் கவர்ந்த விவேகானந்தரின் சில பொன்மொழிகள்
நீ
எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை
படைத்தவன் ஆவாய்!
கீழ்ப்படியக்
கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
கடவுள்
இருந்தால் அவனை நாம் காணவேண்டும்,
ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால்
நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே
மேல்
உலகில்
உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப்
பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே
ஒழுங்காகிவிடும்.
உங்கள்
தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும்
தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர,
கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
சுயவலிமை
பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
எப்போதும்
பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம்
செய்து முடிப்பீர்கள்.
ஒரு
நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள்.
மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச்
செல்லுங்கள்.
உங்களுடைய
நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும். இனி அழுகை
என்ற பேச்சே இருக்கக் கூடாது.
இளைஞர்களே
உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம்
இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
ஏழைகளிடமும்
பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன்
ஆவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக