புதன், 22 ஜனவரி, 2014

புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ?



அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
சென்னையில் தற்போது 37 ஆவது புத்தகக் காட்சி நடைப்பெறுவதை அனைவரும் அறிவோம். இதில் லட்சக் கணக்கான புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இதில் எந்த புத்தகத்தை வாங்குவது? புத்தகத்தை எதன் அடிப்படையில் தெரிவு செய்வது? என்று எண்ணியபடி இணையத்தில் உலாவ தொடங்கினேன். வழக்கம்போல கூகுல் தேடலில் சில சொற்களை தட்டச்சிட்டு தேடத்தொடங்கினேன். அப்போது தான் தெரிந்தது,  புத்தகங்களை மதிப்பிடுவதற்காகவே பல வலைதளங்கள் செயல்ப்பட்டுவருகின்றன என்று. அதே போல் தினசரி நாளிதழ்களான தினத்தந்தி, தினமணி, தினமலர் போன்றவையும், வார மாத இதழ்களும் இந்த சேவையை செய்து வருகின்றன. dialforbooks.in என்ற தளத்திற்கு சென்றால் நாளிதழ்களில் வெளியான புத்தக மதிப்புரைகளும், அவை கிடைக்கும் இடம் பற்றிய விவரங்களையும் காணலாம். அவ்வாறு நான் உலாவியபோது படித்த சில புத்தகங்களின் விவரத்தை எடுத்து இங்கே குறிப்பிட்டுள்ளேன். தங்களுக்கு நேரம் இருப்பின் மேலே குறிப்பிட்டுள்ள தளத்தை ஒரு முறையாவது பார்வையிடுங்கள்.
புத்தகங்களின் விவரம்
உளவியல் மேதை ஸ்க்மண்ட் ப்ராய்டு, எம்.ஏ. பழனியப்பன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 90ரூ.
ராஜாஜி எழுதிய மதுவிலக்கு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, விலை 30ரூ.
உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழாக்கம்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 446, விலை 250ரூ.
பள்ளி உளவியல், பாஞ். இராமலிங்கம், தமிழ்ப் புதுவை வெளியீடு, 22, தேர் வீதி, பிள்ளைசாவடி, புதுவை 14, பக். 240, விலை 300ரூ.
அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 224, விலை 270ரூ.
இது யாருடைய வகுப்பறை?, ஆயிஷா ரா. நடராசன், புக்ஸ் பார் சில்ரன், பக். 248, விலை 150ரூ.
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பெள்க்ஸ், சௌத் உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-250ரூ.
திராவிடநாட்டுக் கல்வி வரலாறு, திராவிடப்பித்தன், மீள் பதிப்பாசிரியர்-இரா. பாவேந்தன், கயல்கவின் பதிப்பகம், 16/25, 2வது கடல்போக்குச் சாலை, வால்மீகி நகர், திரவான்மியூர், சென்னை 41, விலை 250ரூ.
கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, டாக்டர் பி. இரத்தினசபாபதி, டாக்டர் ஆர். இராஜமோகன், சாந்தா பப்ளிணர்ஸ், பக்கங்கள் 312, விலை 150ரூ.
மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ.
கனவு ஆசிரியர், தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை ரூ. 90.
கலாம் காலம், ஆதனூர் சோழன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை 14, பக். 128, விலை 80ரூ.
திருப்புமுனைகள், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், தமிழில்-சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிபப்கம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ.
குப்பை உலகம், சேவ் (Save), 5, அய்ஸ்வர்யா நகர், கே.பி.என்.காலனி, திருப்பூர், பக். 96, விலை 50ரூ.
குப்பை உலகம், சேவ் (Save), 5, அய்ஸ்வர்யா நகர், கே.பி.என்.காலனி, திருப்பூர், பக். 96, விலை 50ரூ.
உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில்குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானிஜான் கான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 200
என் பள்ளி, கல்யாண்குமார், புதிய தலைமுறை பதிப்பகம், 25, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை 90ரூ.
நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ.
இந்திய விஞ்ஞானிகள், சிவன், கற்பகம் புத்தகாலயம், பக்கங்கள் 208, விலை 65ரூ.
சட்டமேதை அம்பேத்கர் 100, ஆர்.சி.மதிராஜ், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 112, டெம்மி விலை 70ரூ.
நேர் நேர் தேமா, கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29 (7/3)1 பிளாக், முதல் தளம், மேட்லிசாலை, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 192, விலை 100ரூ
வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும், முனைவர் ம.இசக்கியப்பன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 78, விலை 105ரூ.
நன்றி.....

வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஏதிலியர் ஓர் அறைகூவல் – சிக்கல்கள் தீர்வுகள் செயல்முறைகள்


ஏதிலியரஓர் அறைகூவல் – சிக்கல்கள்ள் செயல்முறைகள்
தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்,
முனைவர். வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஐயா அவர்கள், திரு. குழந்தை ஐயா அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம். மையப்பொருள் “ஏதினியர் (அகதியர்) ஓர் அறைக்கூவல் – சிக்கல்கள் தீர்வுகள் செயல்முறைகள்” என்பதாகும்.
நாள் : 20/01/2014
நேரம் : காலை 9.30 - மாலை 5.00
இடம் : சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம்
நன்றி.......

திங்கள், 13 ஜனவரி, 2014

விவேகானந்தர்



என் மனம் கவர்ந்த விவேகானந்தரின் சில பொன்மொழிகள்


நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.