திங்கள், 2 ஜூன், 2014

நன்றி சொல்ல வார்த்தை இல்லை



நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அன்புடையீர் வணக்கம்,
ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், லயன்ஸ் & லயனஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் இணைந்து நடத்திய பார்வையற்றோருக்கான ஐந்து நாள் சிறப்பு கணினி பயிற்சி முகாம், எல்லாம் வள்ள இறைவனது அருளாலும் அனைவருடைய ஒத்துழைப்பாலும், 27, மே, 2014 அன்று தொடங்கி 31, மே, 2014 அன்று இனிதே நிறைவேறியது. இம்முகாமினை ஒருங்கிணைத்து நடத்திய திருமதி. பத்மா அம்மா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  இப்பயிற்சி முகாம் நடைபெற இடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் அருமையாக ஏற்பாடு செய்து தந்த கலிகி ரங்கநாதன் மான்ட்ஃபோட் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும், உற்ற துணையாக இருந்த திருமதி. ரேவதி அம்மா அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்பயிற்சி முகாமில் 50 பங்கேற்பாளர்களும், 5 முதன்மை பயிற்றுனர்களும், 5 துணை பயிற்றுனர்களும், 2 உதவிப் பயிற்றுனர்களும் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களை ஐந்து குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு முதன்மை பயிற்றுனரும், ஒரு துணை பயிற்றுனரும், அனைத்து குழுவிற்கும் உதவும் வகையில் இரண்டு உதவிப் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர். குழு மற்றும் பயிற்றுனர்கள் விவரம் பின்வருமாரு:-
1.அந்தகக்கவி குழு
முதன்மை பயிற்றுனர்
முனைவர். சே. திவாகர், M.A., Ph.D.,
துணை பயிற்றுனர்
செல்வி. சேமலா, B.A., B.Ed.,
2.கவிச்சிங்கர் குழு
முதன்மை பயிற்றுனர்
திரு. மா. நாகராஜன், M.A., M.Phil.,
துணை பயிற்றுனர்
திரு. கண்ணதாசன், M.A., B.Ed.,
3.லூயி பிரெயில் குழு
திரு. யு. மகேந்திரன், M.A., M.Phil., P.HD Scholar
துணை பயிற்றுனர்
திரு. பு. வேல்முருகன், M.A., B.Ed.,
4.ஹெலன் கெல்லர் குழு
முதன்மை பயிற்றுனர்
திரு. பாலநாகேந்திரன், IAS Aspirant
துணை பயிற்றுனர்
திரு. சரவணன், M.A., M.Ed.,
5.ஜேம்ஸ் டே மைக்கரன் குழு
முதன்மை பயிற்றுனர்
திரு. நவரசன், M.A., B.Ed.,
துணை பயிற்றுனர்
திரு. தமிழ்மணி, B.A., B.Ed.,
உதவிப் பயிற்றுனர்கள்
திரு. ரா. ராஜா, M.A., M.Ed., Ph.D Scholar
திரு. சே. பாண்டியராஜ், M.A., M.Ed., M.Phil.,
          இரவு பகல் பாராமல் பாங்குடன் பயிற்றுவித்த ஒவ்வொரு பயிற்றுனருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம்.
          இப்பயிலரங்கில், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வங்கி பணியாளர்கள், பிற துறை பணியாளர்கள் என பலரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி மாணவர்களாகவே மாறி பயின்றனர். அப்படி முழு ஈடுப்பாட்டுடன் பங்கேற்ற ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
          இந்த பயிலரங்கம் தொடக்கம் முதல் இறுதி வரை தங்குதடையின்றி நடைபெற உறுதுணையாக இருந்த ஒவ்வொரு தன்னார்வளர்களுக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக இறைவனால் அனுப்பப்பட்ட தன்னார்வளர் கார்த்திக் அவர்களுக்கு எங்களது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அளவிற்கு இங்கே இவரை குறிப்பிட காரணம் பல உண்டு. காலையில் குளிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, தண்ணீர் கொண்டு வந்து தந்தது முதல் ஒரு பங்கேற்பாளரின் அறுந்து போன காலணியை கொண்டு போய் தைத்து கொண்டு வந்தது வரை இவரது பணியை சொற்களுக்குள் அடக்க இயலாது. அவருக்கு மீண்டும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். பங்கேற்ற பயிற்றுனர்கள், பங்கேற்பாளர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் அனைவருக்கும் அனைத்து நிலையிலும் உதவியதை நினைத்து பார்க்கும் போது மனம் பூரிப்படைகிறது. அப்படி முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்ட அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த பயிற்சி முகாமிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்துக்கொண்டதற்கு முதன்மை காரணம் நமது மின் குழுமங்கள் தான். தகவலை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உதவிய ஒவ்வொரு மின் குழுமங்களுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், சமூக வலைத்தளங்களுக்கும், அதில் இந்த செய்தியை பகிர்ந்த ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் நன்றி. இந்த பயிற்சி முகாமிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைத்து கொடையாளர்களுக்கும் உளமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டவர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தாலோ, மன கசப்பு ஏற்பட்டிருந்தாலோ, ஏதேனும் இடையூறு நிகழ்ந்திருந்தாலோ அதற்கு எங்களது கவணக்குறைவே காரணமாக இருக்க முடியும். எனவே, அப்படி ஏதேனும் உங்களை பாதித்திருந்தால் தயவு செய்து மன்னித்தருளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கற்றது கையளவு கல்லாதது கணினியளவு!
நன்றி.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக