புதன், 16 ஏப்ரல், 2014

உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு (UGC NET) ஜூன் 2014



உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு (UGC NET) ஜூன் 2014 
நீங்கள் முதுகலை பட்டம் முடித்தவரா? உங்களுக்கு பேராசிரியர் ஆக ஆசையா? அப்படியானால் இந்த தேர்விற்கு உடனே விண்ணப்பியுங்கள்! இந்த தேர்விற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். உங்கள் பாஸ்போட் அளவு புகைப்படத்தை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முதுகலையில் நீங்கள் எடுத்த மொத்த மதிப்பெண் எவ்வளவு என்பதை கணக்கிட்டு வைத்துக்கொள்ளுங்கள். பிறகு www.ugcnetonline.in என்ற வலைத்தளத்தில் உங்களுக்குரிய மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் முதுகலை முதலாமாண்டு நிறைவு செய்து, இரண்டாம் ஆண்டு படிப்பவராக இருந்தால், அதற்குரிய விவரங்களை உரிய இடத்தில் பூர்த்தி செய்யுங்கள். தேவையான விவரங்களை உரிய இடத்தில் அளித்துவிட்டீர்களா என்பதை சரிபார்த்துவிட்டு ஒப்படையுங்கள். அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிச் செல்லானை எடுப்பதற்குரிய தொடுப்பு கிடைக்கும். அதில் சொடுக்கி, செல்லானை படி எடுத்துக்கொள்ளுங்கள். ஆன்லைனில் விண்ணப்பித்த நாளிலிருந்து, ஒரு வேலை நாளைக்கு பிறகு வங்கியில் கட்டணத்தை செலுத்துங்கள். வங்கியில் கட்டணம் செலுத்திய இரண்டு நாளைக்கு பிறகு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்திற்கு சென்று, உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லினை செலுத்தி உள்ளுழைந்து உங்களுக்குரிய விண்ணப்ப படிவம், நுழைவுச் சீட்டு, வருகை சான்று ஆகியவற்றை படி எடுத்துக்கொள்ளுங்கள். இறுதியாக அனைத்தையும் சரிபார்த்து, உங்களுக்குரிய தேர்வு மையத்தில் உரிய சான்றிதழ்களின் நகலுடன் ஒப்படையுங்கள். தேர்வில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
விண்ணப்பிக்க கடைசி நாள் : திங்கள், மே 5, 2014
SBI வங்கியில் கட்டணம் செலுத்த கடைசி நாள் : புதன், மே 7, 2014
விண்ணப்ப படிவம், நுழைவுச் சீட்டு போன்றவற்றை www.ugcnetonline.in வலைத்தளத்திலிருந்து படி எடுக்க கடைசி நாள் : சனி, மே 10, 2014
விண்ணப்ப படிவத்தை தேர்வு மையத்தில் செலுத்த கடைசி நாள் : வியாழன், மே 15, 2014.
மேலும் விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்வையிடவும்.
நெட் தேர்வுக்கு பயிற்சி
நெட்தேர்வெழுதும் எஸ்சி, எஸ்டி, ஓ.பி.சி. வகுப்பு, சிறுபான்மையின மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மையம் பயிற்சி அளிக்கிறது. மே 1-ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி, ஜூன் 16-ம் தேதி முடிவடையும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங் களை சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஏப்ரல் 24ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று மாணவர் வழிகாட்டி மைய இயக்குநர் ஜி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
என்ற செய்தியும் கல்வி நியூஸ் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது பங்கேற்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
நன்றி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக