பார்வையற்றோருக்கான ஐந்து நாள் சிறப்பு கணினி
பயிலரங்கம்
அன்புடையீர்
வணக்கம்,
ப்ரேரனா
ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், லயன்ஸ் மற்றும்
லயனஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் இணைந்து நடத்தும், பார்வை மாற்றுத்
திறனாளிகளுக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம் (27/05/2014 - 31/05/2014). இப்பயிலரங்கில் பங்கேற்க
விருப்பமுள்ளவர்கள், வரும் 02/05/2014 குல், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் தொடர்புக்கொண்டு,
தங்களது பெயர், ஊர், தொடர்பு எண், பயன்படுத்தும் திரைவாசிப்பான் (Screan
reader (NVDA/JAWS)) போன்ற விவரங்களை செலுத்தி முன் பதிவு
செய்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் 50 பங்கேற்பாளர்களுக்கு
மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பதிவுக்
கட்டணம் ரூபாய் 100. தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து
தரப்படும். அனைவரும் தங்கி பயன்பெற இருப்பதால், வகுப்புகள் காலை தொடங்கி இரவு
சுமார் 8 மணி வரை நடைப்பெறும். பதிவு செய்யும் பங்கேற்பாளர்களுக்கு முறையான
அறிவிப்பு பிறகு அறிவிக்கப்படும்.
பங்கேற்கும்
ஒவ்வொருவரும் மடிக்கணினியை கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.
அடிப்படை
கணினி அறிவு பெற்றிருத்தல் அவசியம்.
தட்டச்சில்
ஓரளவு பயிற்சி இருப்பது அவசியம்.
என்.வி.டி.ஏ
அல்லது ஜாஸ் திரைவாசிப்பான்களில் ஏதேனும் ஒன்றை ஓரளவாவது அறிந்திருத்தல் வேண்டும்.
இப்பயிலரங்கில்
மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணைய பயன்பாட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும்.
எனவே இதனை அறிந்தவர்கள் தயவு செய்து பதிவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நடைபெறும்
இடம் : மான்ன்ஃபோட் பள்ளி, பெரம்பூர்,
சென்னை.
தொடர்புக்கொள்ள
வேண்டிய எண்:
திரு.
ரா. ராஜா
9940393855
நன்றி.....