பார்வையற்றோருக்கான ஐந்துநாள் கணினி பயிலரங்கம்
அன்புடையீர்,
அரிமா சங்கங்கள் மற்றும் ப்ரேரனா ஹெல்ப் லைன்
ஃபௌன்டேஷன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மே
மாதம் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தின் உதவியுடன் பார்வையற்றோருக்கான சிறப்பு
பயிலரங்கம் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். இந்த ஆண்டு 10/05/2017 புதன் கிழமை
முதல் 14/05/2017 ஞாயிற்றுக் கிழமை வரை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இடம் விரைவில்
உறுதி செய்யப்படும்.
கடந்த ஆண்டுகளில் கணினி தட்டச்சு தொடங்கி, மைக்ரோசாஃப்ட் வேட், எக்சல்,
பவர்பாய்ண்ட், இணையம், லிப்ரா ஆஃபிஸ், ஆண்டிராய்டு பயன்பாடு முதலியவற்றைக் கற்றோம். இந்த ஆண்டு நாம் எவ்வித
மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்த தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
பயிலரங்கம் குறித்து நாங்கள் கலந்துரையாடிய
போது பேரா. யு. மகேந்திரன் அவர்கள், பேரா.நாகராஜன் அவர்கள் உள்ளிட்ட கணினி
வல்லுநர்கள் நாம் திட்டமிடுவதைவிட கற்க போகிறவர்களின் எதிர்பார்ப்பை கேட்டறிந்து
திட்டமிடலாம் என்று தெரிவித்தனர். அதன்படி கணினியை சிறப்பாக பயன்படுத்திவரும்
சான்றோர்கள், கணினியை ஆர்வமுடன் கற்க விரும்பும் அறிஞர் பெருமக்கள் அனைவரும்
தங்களது மேலான கருத்துக்களை வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கணினி பயன்பாட்டில் இருந்து செல்பேசி பயன்பாட்டிற்கு மாறிவரும் இன்றைய
சூழலில் பயிலரங்கத்தை எவ்வாறு வடிவமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
என்பதையே தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எனவே கூடுமானவரை நண்பர்கள் அனைவரும்
ஆலோசனை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செல்பேசி: 98411 29163
நன்றி.