பார்வையற்றோர் பயன்பாட்டில் ஆன்டிராய்டு!
கலந்துரையாடல்
அன்புடையீர்,
ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன்
ரோசஸ் அமைப்புகள் சார்பாக ஒவ்வொரு மாதமும் கணினி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு
நடைபெற்று வருவதை அனைவரும் அறிவோம். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் 8ஆம்
தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு ஆன்டிராய்டு பயன்பாடு என்ற
பொருண்மையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில், ஆன்டிராய்டு அடிப்படை,
பார்வையற்றோருக்கான சிறப்பு மென்பொருள்கள், அதன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை, கூடுதல் பயன்பாட்டிற்கான
செயலிகள் மற்றும் கூட்டுருப்புகள் உள்ளிட்ட தகவல்கள் எடுத்துரைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக,
அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றும்
திருமிகு.
A. முருகன் என்கிற முருகராஜன் ஐயா அவர்களும்,
நியு இன்டியா அஷுரன்ஸ் நிறுவனத்தில்
மென்பொருள் மேற்பார்வையாளராக பணிப்புரியும்
திருமிகு. B. கண்ணன் ஐயா
அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 05.02.2015
வியாழக்கிழமைக்குள் தங்களது வரவை pandiyaraj18@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதி
செய்துக்கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், முதலில் பதிவு
செய்யும் 50 பார்வையற்றோர் மட்டுமே பங்கேற்க இயலும் என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
நாள்: 08.02.2015 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: 09:30 முதல் 12:30 வரை
இடம்: கோலப்பெருமாள் செட்டி மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை. டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி அருகில்.
இரங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்: டி.ஜி.
வைஷ்ணவா கல்லூரி அல்லது என்.எஸ்.கே நகர்.
நன்றி.....