புதன், 1 அக்டோபர், 2014

கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்- சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்!



கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்- சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்!

தாயே சரஸ்வதியே!
கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்
என்பதை எங்களுக்கு உணர்த்திடவோ
நீ கற்கும் வண்ணம் காட்சி தருகிறாய்!
அன்னையே!
அறிவார்ந்தவரானாலும் அன்றாடம்
கற்க வேண்டும் என்பதை
உன் வடிவம் கண்டு உணர்ந்தோம்அதை
உன் மைந்தன் வள்ளுவன் சொல்ல அறிந்தோம்!
பட்டம் பல படித்தும்
அறிவின் குறைவால் அல்லும் பகலும் துடித்தோம்!
கற்கும் வரம் வேண்டி உன்னை
நித்தம் நித்தம் நினைந்தோம்
உன்னையே  தஞ்சமென அன்றாடம் பணிந்தோம்!
அருளே உருவாய் ஞானமே வடிவாய் காட்சி தரும் கலைவாணியே!
உன் திருநாளாம் இன்று உன் திருவடி நோக்கி விரைந்தோம்
உன்னையே சரண் அடைந்தோம்!
விரைவாய் வருவாய் நிறைவாய் அருள்வாய் சுகபாணியே!
  தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
  கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396)
  மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக்    கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். (மு.வ உரை)
Translation:
  In sandy soil, when deep you delve, you reach the springs below;
  The more you learn, the freer streams of wisdom flow.
Explanation:
  Water will flow from a well in the sand in proportion to the depth to which it
  is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்!

2 கருத்துகள்:

  1. அருமை சார். நாளும் கற்போம்.வாழும் வரை கற்போம். கற்பிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மேடம். தங்களது வழிகாட்டுதலிலும் சோகா தமிழ் உறவுகளின் வழிகாட்டுதலிலும் கற்க கற்பிக்க காத்திருக்கிறேன்.

      நீக்கு